அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை

அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன

மச்சு அணி மாடப் புதுவைக்கோன் பட்டன் சொல்

நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க -

மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தே போல்

சொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என்

குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்,

கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கிண்கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினில்

கங்கணம் இட்டுக் கழுத்தில் தொடர் கட்டித்

தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து

என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்

எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்

ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண் ஆள்வான்

கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய

அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்,

ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நாந்தகம் ஏந்திய நம்பி! சரண் என்று

தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி, தரணியில்

வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண்தேர்

ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான்

உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடிக்

கண் பல பெய்த கருந்தழைக் காவின் கீழ்ப்

பண் பல பாடிப் பல்லாண்டு இசைப்ப, பண்டு

மண் பல கொண்டான் புறம்புல்குவான்,

வாமனன் என்னைப் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சத்திரம் ஏந்தித் தனி ஒரு மாணியாய்

உத்தர வேதியில் நின்ற ஒருவனைக்

கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட

பத்திராகாரன் புறம்புல்குவான்

பார் அளந்தான் என் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பொத்த உரலைக் கவிழ்த்து, அதன்மேல் ஏறி

தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்

மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய

அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்

ஆழியான் என்னைப் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மூத்தவை காண முது மணற்குன்று ஏறிக்

கூத்து உவந்து ஆடிக் குழலால் இசை பாடி

வாய்த்த மறையோர் வணங்க இமையவர்

ஏத்த வந்து, என்னைப் புறம்புல்குவான்,

எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கற்பகக் காவு கருதிய காதலிக்கு

இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்

நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள்

உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்

உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com