அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வண்ண நல் மணியும் மரகதமும்

அழுத்தி நிழல் எழும்

திண்ணை சூழ் திருக்கோட்டியூர்த் திரு

மாலவன் திருநாமங்கள்

எண்ணக் கண்ட விரல்களால் இறைப்

பொழுதும் எண்ணகிலாது போய்

உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக்

கவளம் உந்துகின்றார்களே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உரக மெல் அணையான் கையில் உறை

சங்கம் போல் மட அன்னங்கள்

நிரைகணம் பரந்து ஏறும் செங்

கமல வயல் திருக்கோட்டியூர்

நரகநாசனை நாவிற் கொண்டு அழை -

யாத மானிட சாதியர்
பருக நீரும் உடுக்குங் கூறையும்
பாவம் செய்தன தாம் கொலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆமையின் முதுகத்திடைக் குதி

கொண்டு தூ மலர் சாடிப் போய்த்

தீமை செய்து இளவாளைகள் விளை

யாடு நீர்த் திருக்கோட்டியூர்

நேமி சேர் தடங்கையினானை

நினைப்பு இலா வலி நெஞ்சு உடைப்

பூமிபாரங்கள் உண்ணும் சோற்றினை

வாங்கிப் புல்லைத் திணிமினே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து

புலன்கள் ஐந்து பொறிகளால்

ஏதம் ஒன்றும் இலாத வண்கையி

னார்கள் வாழ் திருக்கோட்டியூர்

நாதனை நரசிங்கனை நவின்று

ஏத்துவார்கள் உழக்கிய

பாத தூளி படுதலால் இவ்

உலகம் பாக்கியம் செய்ததே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று

கூடி ஆடி விழாச் செய்து

திருந்து நான்மறையோர் இராப்பகல்

ஏத்தி வாழ் திருக்கோட்டியூர்க்

கருந் தடமுகில் வண்ணனைக் கடைக்-

கொண்டு கைதொழும் பத்தர்கள்

இருந்த ஊரில் இருக்கும் மானிடர்

எத்தவங்கள் செய்தார் கொலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நளிர்ந்த சீலன் நயாசலன் அபி-

மான துங்கனை நாள்தொறும்

தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட

செங்கண் மால் திருக்கோட்டியூர்க்

குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம்

பாடுவார் உள்ள நாட்டினுள்

விளைந்த தானியமும் இராக்கதர்

மீது கொள்ளகிலார்களே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கொம்பின் ஆர் பொழில்வாய்க் குயிலினம்

கோவிந்தன் குணம் பாடு சீர்ச்

செம்பொன் ஆர்மதில்சூழ் செழுங்

கழனி உடைத் திருக்கோட்டியூர்

நம்பனை நரசிங்கனை நவின்று

ஏத்துவார்களைக் கண்டக்கால்

எம்பிரான் தன் சின்னங்கள் இவர்

இவர் என்று ஆசைகள் திர்வனே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காசின் வாய்க் கரம் விற்கிலும் கர-

வாது மாற்று இலி சோறு இட்டுத்

தேச வார்த்தை படைக்கும் வண்கையி

னார்கள் வாழ் திருக்கோட்டியூர்க்

கேசவா ! புருடோத்தமா ! கிளர்

சோதியாய் ! குறளா ! என்று

பேசுவார் அடியார்கள் எம்தம்மை

விற்கவும் பெறுவார்களே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சீத நீர் புடை சூழ் செழுங் கழனி

உடைத் திருக்கோட்டியூர்

ஆதியான் அடியாரையும் அடிமை

யின்றித் திரிவாரையும்

கோதில் பட்டர்பிரான் குளிர்

புதுவைமன் விட்டுசித்தன் சொல்

ஏதம் இன்றி உரைப்பவர் இருடீ

கேசனுக்கு ஆளரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆசைவாய்ச் சென்ற சிந்தையர் ஆகி

அன்னை அத்தன் என் புத்திரர் பூமி

வாச வார் குழலாள் என்று மயங்கி

மாளும் எல்லைக்கண், வாய் திறவாதே,

கேசவா ! புருடோத்தமா ! என்றும்

கேழல் ஆகிய கேடிலீ ! என்றும்

பேசுவார் அவர் எய்தும் பெருமை

பேசுவான் புகில் நம் பரம் அன்றே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com