அமலனாதிபிரான் - 3

மந்தி பாய்வட வேங்கட மாமலை* வானவர்கள்
சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்*
அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில்*
உந்தி மேலதன் றோ!அடி யேனுள்ளத் தின்னுயிரே !

மந்தி பாய் வடவேங்கட மாமலை* வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்*
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேலது அன்றோ ! அடியேன் உள்ளத்து இன்னுயிரே !
 

mandhi paay vada venkata maa malai vaanavargaL
sandhi seyya ninRaan arangathu aravin aNaiyaan
andhi pOl niRaththu aadaiyum adhan mEl ayanai padaithadhu Or ezhil
undhi meladhu anRo ! adiyen uLLaththu innuyire !

He stands in the monkey forest of Venkatam hills over the North, worshipped by the celestials. He reclines on a serpent in Arangam. Over His sunset-red vesture, the beautiful lotus-seat of Brahma rises from His navel, captivating my heart and spirit !

[பொருள்]

ஸ்ரீரங்கத்திற்கு வடக்கு திசையில் உள்ள வேங்கட மலையில் நின்று அருள் புரியும் வேங்கடநாதனே அரங்க நகருள் ஆதிசேஷன் என்னும் படுக்கை மீது அரங்கனாக கிடக்கிறான். இந்த அரங்கன்(வேங்கடநாதன்) வானில் வாழ்பவரும் வந்து வணங்கும் பெருமை மிக்கவன். இன்று எனக்கு அவன் அற்புத தரிசனம் தருகிறான். அவனது திவ்யமான, மங்களகரமான அழகை அனுபவிக்கும் பேறு பெற்றேன். என்னவென்று சொல்வேன் ! மாலை நேரத்து  செவ்வான நிறத்தை ஒத்த சிவந்த ஆடையின் மேல், அழகான தாமரையில் பிரம்மதேவரைப் படைத்த அந்த அழகிய திருவயிற்றில், அதன் திவ்யமான அழகில், அடியேனது இனிமையான உயிர் லயித்துவிட்டது !

(சொற்பொருள்)

அயன் - படைக்கும் தொழிலை உடைய பிரம்ம தேவர்
மந்தி - குரங்கு
சந்தி - வணக்கம்; காலை மாலை நியமம்; சந்தியா வந்தனம்
அந்தி - செவ்வானம்
உந்தி - நாபிக்கமலம்; வயிறு
அரவு - நாகம் (ஆதிசேஷன்)
வானவர்கள் - வானில் வாழ்பவர்; நித்ய சூரிகள்

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com