கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 2

கங்குலும் பகலும் கண்துயி லறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்றுகை கூப்பும்
'தாமரைக் கண்' என்றே தளரும்*
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட் டென்னும்
இருநிலம் கைதுழா விருக்கும்*
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்!
இவள்திறத் தென்செய்கின் றாயே?

(திருவாய்மொழி 7.2.1)

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
'தாமரைக் கண்' என்றே தளரும்*
'எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு?' என்னும்
இருநிலம் கைதுழா இருக்கும்*
செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத்து என் செய்கின்றாயே?
(திருவாய்மொழி 7.2.1)

[பொருள்]

(என்னுடையப் பெண்) உன் மீது கொண்ட மாறாத அன்பினால் உன்னையே எப்பொழுதும் நினைத்துக் கொண்டு, உன் வரவையே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறாள். இரவெல்லாம் கண் விழித்து உன் நினைவாகவே அரற்றுகிறாள். பகலிலும் கண் மூடினாள் இல்லை. தெருவிலே, ஒன்றும் அறியாத குழந்தையை போல் (உலகத்தவர் இவளை பைத்தியமோ என்று நினைக்கும் வகையில்) தன் கைகளால் மண்ணை துழாவிக் கொண்டு இருக்கிறாள். ஒரு சமயம் "சங்கு சக்கரங்கள்" என்று சொல்லி உன்னை எதிரே கண்டவள் போல் கைகளை கூப்பி வணங்குகிறாள். மற்றொரு சமயத்தில் மிகவும் தீனமான குரலில் "தாமரைக் கண்" என்று சொல்லி (மேற்கொண்டு பேச முடியாமல்) தளர்ச்சி அடைகிறாள். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக, 'உன்னை பிரிந்து நான் எவ்வாறு உயிர் தரிப்பேன்?' என்று கதறுகிறாள். திருவரங்க நாதனே ! என் பெண்ணை என்ன செய்ய உத்தேசித்து இருக்கிறாய்?
 

(சொற்பொருள்)

கங்குல் - இரவு
இருநிலம் - பூமி (பகவான் இடந்த, கடந்த "பெரிய பூமி")
 

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com