திருவேங்கடம் மேய விளக்கே !

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே !
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய் !
பாடா வருவேன் வினையாயின பாற்றே.
(பெரிய திருமொழி - 4.7.5)

 

[பொருள்]

வேடர்கள் மிகுதியாக இருக்கும் திருவேங்கடமலை மீது, தம்மை அண்டியவர்கள் உள்ளத்து இருள் நீக்கும் விளக்காக நிற்பவனே ! நாடு போற்றும் புகழ் பெற்ற வேதியர்கள் நிறைந்த திருநாங்கூரில், தளிர்கள் நிறைந்த, அழகு பொங்கும் மலர்ச் சோலைகளால் சூழப்பெற்ற திருவெள்ளக்குளத்தில் இருப்பவனே ! உன் குணங்களைப் பாடிக் கொண்டு வருவேன். எனது வினைகளை அழித்தருள வேண்டும். (திருவெள்ளக்குளம், திருநாங்கூர் பதினொரு திவ்யதேசங்களுள் ஒன்றாகும்.)

 

(சொற்பொருள்)

சேடு - அழகு; திரட்சி
ஆர் - நிறைந்த
பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com