அமலனாதிபிரான் - 2

உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற*
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக்*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத் தம்மான்* அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்ற தாமென சிந்தனையே !

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற*
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக்*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான்* அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என சிந்தனையே !

[பொருள்]

ஸ்ரீ ரங்கத்தின் தலைவன் பெருமைகள் பல. இவனே முன்பு திரிவிக்ரமனாக, மிக்க மகிழ்ச்சியுடன், விண்ணை முட்டும் அளவு உயர்ந்து உலகங்களை அளந்தான். இவனே ககுத்த வம்சத்தில் பிறந்த ராமன். அன்று தன்னை எதிர்த்து வந்த அரக்கர்களின் உயிரைக் கொடிய அம்புகளால் கவர்ந்த வீரன். இன்று எனது மனம், முன்பு ராமனாகவும் திரிவிக்ரமனாகவும் திகழ்ந்த பெருமை வாய்ந்த அரங்கனின் அழகில் மயங்குகிறதே! அரங்கனின் இடையில் பொருந்தி உள்ள சிவந்த ஆடையில் ரமிக்கின்றதே !!

(சொற்பொருள்)

உவந்த உள்ளம் - மகிழ்ச்சியுடன் கூடிய உள்ளம்
கடி - நறுமணம்
ஆர் - மிகுந்த
கடி ஆர் பொழில் அரங்கத்து அம்மான் - மணம் மிக்க பொழில்கள் உடைய அரங்கம்; அதனுடைய சுவாமி.
அண்டம் - வானம்
உற - அடைய; கிட்ட
நிவத்தல் - உயர்தல்; வளர்தல்
நீள் முடியன் - நீண்ட மணிமுடியை (கிரீடத்தை) உடையவன்.
நேர்ந்த - எதிர்த்த
நிசாசரர் - அரக்கர் (வடமொழியி

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com