​திருப்பல்லாண்டு - 4

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கூடல் (மதுரை)

பாசுர எண்: 4
திருப்பல்லாண்டு

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந் தெங்கள் குழாம்புகுந்து*

கூடும் மனமுடை யீர்கள் வரம்பொழி வந்தொல்லை கூடுமினோ*

நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று* பாடும் மனமுடை பத்தருள் ளீர்!வந்து பல்லாண்டு கூறுமினே.

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து*

கூடும் மனம் உடையீர்கள் வரம்பொழி வந்து ஒல்லை கூடுமினோ*

நாடும் நகரமும் நன்கு அறிய "நமோ நாராயணாய" என்று*

பாடும் மனம் உடை பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே.

yEdu nilathil iduvadhan munam vandhu engal kuzhaam pugundhu

koodum manam udaiyeergal varambozhi vandhu ollai koodumino

naadum nagaram nangu ariya namo naaraayanaaya enru

paadum manam udai paththar ulleer vandhu pallaandu koorumine.

(thiruppallaandu - 4)

Ye, devotees of the Lord who wish to sing the glory of Sriman Narayana ! Please do not restrict yourselves ! Join us quickly ! Let us all sing His glory and chant the divine phrase, "Namo Narayanaya !", filling our surroundings, town, country and entire world with spiritual fervor and divine bliss.

[பொருள்]

நிலையில்லாத இந்த உடல், நிலத்தில் வீழ்வதற்கு முன்னால் வந்து எங்கள் குழுவில் புகுந்து, எங்களைப் போலவே ஸ்ரீ மந் நாராயணனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களே ! விரைவாக வாருங்கள் ! உங்களுக்கு நீங்களே வரம்பிட்டுக் கொள்ள வேண்டாம். நாம் அனைவருமே நாராயணனுடைய உடைமைகள். அவனுக்கு வேண்டப்பட்டவர்கள். நாடும் நகரமும் நன்றாக அறியும் வகையில் 'நமோ நாராயணாய !' என்று அவன் புகழ் பாடும் விருப்பம் உடைய பக்தர்களே, வாருங்கள் !அவனுக்குப் 'பல்லாண்டு' பாடுவோம்.

(சொற்பொருள்)

ஏடு - உடல்

குழாம் - குழு

ஒல்லை - விரைவு; வேகம்

பத்தர் - பக்தர்

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com