​திருப்பல்லாண்டு - 5

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கூடல் (மதுரை)

பாசுர எண்: 5
திருப்பல்லாண்டு

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுரர் இராக்கதரை*

இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு*

தொண்டக் குலத்திலுள்ளீர் வந் தடிதொழு தாயிர நாமம் சொல்லிப்

பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே.

(திருப்பல்லாண்டு - 5)

அண்டக்குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை*

இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு*

தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிரநாமம் சொல்லிப்

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே.

(திருப்பல்லாண்டு - 5)

aNda kulaththukku adhipathiyaagi asurar raakadharai

iNdai kulaththai eduththu kaLaindha irudeekesan thanakku

thoNda kulaththil uLLeer vandhu adi thozhudhu aayiram naamam solli

paNdai kulaththai thavirndhu pallaandu pallaayiraththandu enmine.

(Thiruppallaandu - 5)

Sriman Narayana, who destroys the evil forces, is the Lord of the whole universe. He is also the Lord of the Rishis, the Lord of those who have controlled their senses. Aye, all those who wish to serve Him ! Give up your desires arising out of selfishness or ego. It is a privilege to remember that we belong to the Supreme Hrushikesha. Let us all remember that we belong to the devotees clan. Let us revere His feet, chant His thousand names and sing His glory.

[பொருள்]

ஸ்ரீ மந் நாராயணனுடைய தொண்டர்க் கூட்டத்தில் உள்ளவர்களே ! வாருங்கள் ! எல்லா உலகங்களுக்கும் தலைவானாகவும், சக உயிர்களுக்கு தீமை புரியும் அசுர ராக்ஷச கூட்டத்தை வேருடன் களைந்து அனைவருக்கும் பாதுகாவலானாகவும், முற்றும் துறந்த முனிவர்கள் வணங்கும் தெய்வமாகவும் விளங்கும் ஹ்ருஷீகேசனை போற்றுவோம். அவனுடைய அடித் தொழுது, கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு மதுசூதனா, திருவிக்ரம வாமனா, ஸ்ரீதரா, ஹ்ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா, அச்யுதா, அநந்தா, ராமா, கிருஷ்ணா என்று அவனுடைய நாமங்களைப் பாடிப் பரவுவோம். பொறுமையுடன் ஆயிர நாமங்களையும் உளம் குளிர சொல்லுவோம்.

(சொற்பொருள்)

குலம் - கூட்டம்; குழு; இனம்

அண்டம் - உலகம்

அண்டக்குலம் - பல்வேறு உலகங்களின் கூட்டம்.

இராக்கதர் - இராக்ஷசர்கள்.

இண்டர் - கொலை முதலிய இழிவான செயல்களை புரிபவர். (கொலைஞர்)

இண்டக்குலம் - கொலைஞர்க் கூட்டம்.

இருடி - புலன்களை அடக்கிய முனிவர்.

இருடீகேசன் - முனிவர்களுக்கு எல்லாம் தலைவன். (ஹ்ருஷீகேசன் - புலன்களுக்குத் தலைவன் என்றும் பொருள் படும்.)

ஆயிர நாமம் - விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com