பரிவதில் ஈசனைப் பாடி...

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 2137
திருவாய்மொழி : 6

பரிவதி லீசனைப் பாடி
விரிவது மேவ லுறுவீர் !
பிரிவகை யின்றிநன் னீர்தூய்
புரிவது வும்புகை பூவே.

(திருவாய்மொழி 1.6.1)

பரிவதுஇல் ஈசனைப் பாடி
விரிவது மேவல் உறுவீர் !
பிரிவகை இன்றி நல்நீர் தூய்
புரிவதுவும் புகை பூவே.

(திருவாய்மொழி 1.6.1)

parivadhil eesanai paadi
virivadhu meval uruveer
pirivagai indri nanneer thooi
purivadhuvum pugai poove

(Thiruvaimozhi 1.6.1)

Seekers of infinte joy, do not give up ! Sing of the faultless Lord, offer flowers, incense and pure water.

[பொருள்]

அடியார்கள் அர்ப்பணம் செய்யும் பதார்த்தம் எதுவாயினும், அதில் எந்த விதமான குற்றம் குறையும் கண்டுபிடிக்கத் தெரியாத பரம தயாளனும், கருணாமூர்த்தியும், பக்த வத்ஸலனும், எல்லா உயிர்களுக்கும், உலகங்களுக்கும் தலைவனுமான பகவான் ஸ்ரீ மந் நாராயணனைப் பாடி மகிழ வேண்டும் என்ற ஆசையில் உறுதி உடையோரே ! உபகரணம் எதுவும் இல்லையே என்று அவனை அனுபவிப்பதில் பிரிவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உள்ளத்தில் அன்புடன், நம்மால் இயன்ற அளவில், நல்ல நீர், நறுமணம் கமழும் ஒரு புகை, ஏதேனும் ஒரு பூ சமர்ப்பித்தால் போதும். பலன் வேண்டாத மனநிலையில் தீராத அன்பு ஒன்றே போதுமானது.

(சொற்பொருள்)

பரிவு - துக்கம்;
பரிவதனம் - அழுகை
பரிவது - துக்கப்படுவது

பரிவு - அன்பு; பாரபட்சத்துடன் கூடிய அன்பு
பரிவது - பரிந்து செயல்படுவது

பரிவதனம் - நிந்தனை
பரிவாதம் - பழிச்சொல், குற்றச்சாட்டு
பரிவது - நிந்தனை செய்வது; குற்றம் சாட்டுவது;

விரிவது - எங்கும் எதிலும் இறைவன் என்ற பரந்த மன நிலைக்கு விரிவது
மேவல் - விரும்புதல்; நேசம் கொள்ளுதல்;
உறுதல் - உறுதியான நிலைப்பாடு கொள்ளுதல்
உறுவீர் ! - உறுதியான் நிலைப்பாட்டினைக் கொண்டோரே ! (விளி)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com