தேனில் இனிய பிரானே !

ஆனிரை மேய்க்கநீ போதி, அருமருந் தாவ தறியாய்
கானகம் எல்லாம் திரிந்துஉன் கரிய திருமேனி வாட*
பானையிற் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப*
தேனில் இனிய பிரானே ! செண்பகப் பூச்சூட்ட வாராய்.
(பெரியாழ்வார் திருமொழி - 2.7.1)

ஆனிரை மேய்க்கநீ போதி, அருமருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட*
பானையிற் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப*
தேனில் இனிய பிரானே ! செண்பகப் பூச்சூட்ட வாராய்.
(பெரியாழ்வார் திருமொழி - 2.7.1)

aanirai mEykkanee pOdhi arumarundhu aavadhu aRiyaay
kaanagam ellaam thirindhu un kariya thirumeni vaada
paanaiyil paalai parugi patraadhaar ellaam sirippa
thEnil iniya piraanE ! senbaga poochootta vaaraay.
(Periyazhvar Thirumozhi - 2.7.1)

O Lord sweeter than honey! Unfriendly folks laugh at you when you drink the milk from the pitcher and get punished. You go after the grazing cows, and roam the forest everywhere letting your bright face wither. You do not know you are our precious medicine. Come, wear these Senbakam flowers on your coiffure.

[பொருள்]

(யசோதைப் பிராட்டி கண்ணனைப் பூச்சூட்ட அழைத்தல்)
தேனைக் காட்டிலும் இனிமையான என் தெய்வமே ! காட்டில் புல் பச்சையிருக்கும் இடம் தேடி ஓடும் பசுக்களின் பின்னே நீயும் அவற்றை மேய்க்க ஓடுகிறாய். திவ்யமான அழகு வாய்ந்த உன் மென்மையான திருமேனி வாடுவதையும் நீ பொருட்படுத்துவதில்லை. கண்டவர்கள் கண் குளிரும்படியிருக்கும் உன் திவ்யமான திருமேனி, சம்சாரத்தில் உழல்வோர்க்கு  வெக்கை தீர்க்கும் அருமையான மருந்தாகும். உன் பெருமை அறியமாட்டாய்.  உன்னை உகவாதார் "எங்கள் வீட்டில் கைப்பானையில் வைத்திருந்த கறந்த பாலைப் பருகிச் சென்றான்" என்று பரிகாசம் செய்துச் சிரிக்கும்படியாக எளிமையாக விளங்குபவனே.  உன் குணாதிசயங்கள் எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டுவதில்லை. என்னை விட்டு அகலாதே. இன்று நீ காட்டிற்கு போகாதே. உன் மென்மையான திருமேனிக்கு மென்மையான மலர்கள் சூடவேண்டும். இப்பொழுது இந்த செண்பகப் பூச்சூட்ட நீ அருகே வா.

(சொற்பொருள்)

ஆ - பசு
நிரை - திரள்; கூட்டம்; வரிசை
ஆனிரை - பசுக்கள் கூட்டம்
பற்றாதார் - உகவாதார்;

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com