அக்காரக் கனி

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.
(பெரிய திருமொழி - 8.9.4)

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசை இருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே.
(பெரிய திருமொழி - 8.9.4)

mikkaanai maRaiyaay virindha viLakkai ennuL
pukkaanai pugazhsEr poliginRa ponmalaiyai
thakkaanai kadigai thadankundrin misaiyirundha
akkaara kaniyai adaindhuindhu pOnEnE
(periya thirumozhi - 8.9.4)

The sweet Lord residing on the hill of Kadigai (and also in Kannapuram) is the transcendant one; He is verily the expanse of light in the form of Vedas, dispelling darkness from our hearts; and He is the Lord in my own heart; He shines as a resplendant golden mountain and is celebrated by one and all for His auspicious qualities; Benevolent and full of grace, He is cherished like a sweet fruit by His devotees. Having attained Him, my life has been saved (from worldly desires and worries).

[பொருள்]

அனைத்திற்கும் மேலானவனை, வேதங்களாய் விரிந்து உள்ளத்து இருளை நீக்கும் விளக்கை, என் உள்ளத்துள் நின்று, என் அறியாமையை நீக்கி அருள் செய்பவனை, புகழ்மிக்க ஒளி வீசும் பொன்மலையாய் இருப்பவனை, தகவு உடையவனை, திருக்கடிகை என்னும் திவ்யதேசத்தில், குன்றத்தின் மேல் வீற்றிருக்கும் இனிய கனியை அடைந்து உய்வு பெற்றேனே !

(சொற்பொருள்)

மிக்கான் - மிக்கு இருப்பவன்; மேலானவன்
புக்கான் - புக்கு (புகுந்து) இருப்பவன்
தடங்குன்றம் - உயர்ந்த குன்றம் (தடம் - உயர்ந்த இடம்; அகலம்)
மிசை - மேல்
தகவு - அருள்; நற்குணம்; பெருமை
தக்கான் - தகவு உடையவன்
அக்காரம் - வெல்லம்; கற்கண்டு; கரும்பு
அக்காரக்கனி - வெல்லம் போன்ற சுவையுடைய பழம்
உய்வு - பிழைத்தல்; ஈடேற்றம்

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com