பிறப்பில் பல்பிறவிப் பெருமான்

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 2286
திருவாய்மொழி : 9

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்*
இறப்பில் எய்துக, எய்தற்க* யானும்
பிறப்பில் பல்பிற விப்பெரு மானை*
மறப்பொன் றின்றியென் றும்மகிழ் வேனே.
(திருவாய்மொழி - 2.9.5)

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்*
இறப்பில் எய்துக, எய்தற்க* யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை*
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வேனே.
(திருவாய்மொழி - 2.9.5)

siRappil veedu suvarkgam naragam
iRappil eidhuga, eidharkka* yaanum
piRappil palpiRavi perumaanai
maRappu ondRu indRi endRum magizhvEnE.
(Thiruvaimozhi - 2.9.5)

At the end of this birth, I am prepared for any eventuality. I may attain liberation or go to heaven or go to hell. It is immaterial to me, for I have resolved to meditate on the birthless Lord, who for the sake of His devotees comes to this earth in various forms. Wherever I go to, I shall ever think upon His grace, His infinite auspicious qualities, His admirable ploys and exploits and be immersed in divine bliss.

[பொருள்]

இந்த உடலை நீத்த பிற்பாடு - எல்லாவிதமான சிறப்பிற்கும் இடமான ஸ்ரீ வைகுந்தம், அல்லது சுவர்க்கம், அல்லது நரகம் - இவற்றுள் எதனை அடைந்தாலும், அடையாவிடினும் எனக்கு அது ஒரு பொருட்டல்ல. ஏனெனில், நான் எங்கு சென்றிடினும், எப்பொழுதும், என் சுவாமியை, பிறப்பு-இறப்பு என்னும் சுழலில் சிக்கி அவதியுறும் உயிர்களைக் காக்க பல அவதாரங்களைச் செய்த பெருமானை, கர்ம வசத்தினால் பிறவாத பெருமானை எண்ணியவாறே ஆனந்தத்தில் திளைத்திருப்பேன். அவன் நற்குணங்களை, அவன் பேரருளை, என்றும் மறவாமல் மகிழ்ந்திருப்பேன்.

(சொற்பொருள்)

சிறப்பில் - சிறப்பு + இல் (இல் - இருப்பிடம்)

வீடு - வைகுந்தம்; மோக்ஷம்

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com