அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருப்புள்ளம்பூதங்குடி
பாசுர எண்: 0
பெரிய திருமொழி
: 1
அறிவ தரியான் அனைத்துலகும்
உடையான் என்னை யாளுடையான்*
குறிய மாணி யுருவாய
கூத்தன் மன்னி யமருமிடம்*
நறிய மலர்மேல் சுரும்பார்க்க
எழிலார் மஞ்ஞை நடமாட*
பொறிகொள் சிறைவண் டிசைபாடும்
புள்ளம் பூதங்குடிதானே.
(பெரிய திருமொழி - 5.1.1)
அறிவது அரியான் அனைத்து உலகும்
உடையான் என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய
கூத்தன் மன்னி அமரும் இடம்*
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க
எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட*
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்
புள்ளம் பூதங்குடி தானே.
(பெரிய திருமொழி - 5.1.1)
aRivadhu ariyaan anaithu ulagum
udaiyaan ennai aaludaiyaan
kuRiya maaNi uruvaaya
kooththan manni amarumidam
naRiya malarmEl surumbaarkka
ezhilaar majjnai nadamaada
poRikoL siRaivaNdu isai paadum
puLLam boothamkudi thaane.
(periya thirumozhi - 5.1.1)
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com