தழைகளும் தொங்கலும் -5

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்

சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து,

பற்றி நின்று ஆயர் கடைத்தலையே

பாடவும் ஆடக் கண்டேன் ; அன்றிப் பின்,

மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்

மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்;

கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்

கொடுமின்கள் ; கொடீராகிற் கோழம்பமே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com