அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருவேங்கடம் (திருப்பதி)
பாசுர எண்: 0
பெரிய திருமொழி
: 8
மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலிமண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.
(பெரிய திருமொழி - 6-8-1)
மான் தோலினை மார்பில் தரித்த குள்ள வடிவ பிரம்மசாரியாகச் சென்று மாபலி சக்கரவர்த்தியிடம் "மூன்று அடி நிலம் தா" என்று யாசித்து, மாபலி ஈந்த அளவிலே திரிவிக்கிரம அவதாரம் செய்து உலகங்களைத் தன் திருவடிகளால் அளந்த பெருமான்; தேன்கூடுகள் நிறைந்த மலையடிவாரத்தை உடைய திருவேங்கடத்தில் நின்ற பெருமான்; அவனை நான் நாடிச் சென்று திருநறையூரில் கண்டேனே.
சாரல் - மலையடிவாரம்; தாழ்வரை; சரிவான பக்கம்(மலைச்சாரல்)
தாள் - திருவடி
மாணி - குள்ள வடிவினன்; பிரம்மசாரி;அழகன்
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com