அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருநறையூர்
பாசுர எண்: 0
பெரிய திருமொழி
: 5
கலங்க முந்நீர் கடைந்தமு தங்கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே.
(பெரிய திருமொழி - 6-5-1)
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடர் ஆய
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்
நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே.
(பெரிய திருமொழி - 6-5-1)
முன்பு ஒரு காலம் தேவர்கள் அடைந்த துயரம் தீர, பாற்கடலைக் கடைந்து அதில் தோன்றிய அமுதத்தை அவர்களுக்கு வழங்கிய பெருமான்; பேரொளி வீசும் சக்கரத்தை வலது கையிலும், சங்கை இடது கையிலும் உடைய பெருமான்; அவன் ஊர் எதுவெனில், நன்மை தரக்கூடிய உண்மையைப் பேசும் அந்தணர்கள் வாழும் திருநறையூர் ஆகும்.
முந்நீர் - மழை நீர், ஆற்று நீர், ஊற்று நீர் மூன்றும் உடைய கடல்
இமையோர் - கண் இமைக்காதவர், தேவர்கள்
துளங்கல் - வருத்தம், சோர்வு
நல்குதல் - வழங்குதல்
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com