அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)
பாசுர எண்: 425
பெரியாழ்வார் திருமொழி
: 10
எல்லையில் வாசல் குறுகச் சென்றால்
எற்றி நமன் தமர் பற்றும் போது*
நில்லுமின் என்னும் உபாயம் இல்லை;
நேமியும் சங்கமும் ஏந்தினானே*
சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம்
சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்*
அல்லற் படா வண்ணம் காக்க வேண்டும்;
அரங்கத்து அரவணைப் பள்ளியானே !
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com