அருளியவர்: மதுரகவி ஆழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 937
கண்ணிநுண் சிறுத்தாம்பு
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே.
(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 1)
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்,
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்,
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே.
தாய் யசோதையிடம் இனிய மாயம் செய்து, சிறு தாம்புக் கயிற்றால் தம்மை கட்டிவிட சம்மதித்த கண்ணபிரான் என் அப்பன் என்றால், அவனை விடவும் எனக்கு இனியவர் ஒருவர் இருக்கிறார். அவர் தெற்கில் உள்ள ஆழ்வார் திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் ஆவார். "தென் குருகூர் நம்பி" என்று அவர் பெயரைச் சொல்வது எனக்கு பேரின்பம். பெயரைச் சொல்லும் பொழுதே என் நாவில் அமுதம் ஊறும். [மதுரகவி ஆழ்வார், பெருமாளை விட நம்மாழ்வாரிடம் அதிக ஈடுபாடு கொண்டவர்.]
கண்ணி - கயிறு
பெருமாயன் - கண்ணபிரான், திருமால்
நண்ணி - சேர்ந்து, கிட்டே சென்று
நம்பி - விஷ்ணுவை அர்ச்சிப்பவன் (மதுரை தமிழ் பேரகராதி)
அண்ணி - (நாமம்) கிடைத்த அளவில், அருகே போய்.
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com