​வண்ணமாடங்கள் - 1

வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட

கண்ணன் முற்றம் கலந்தள றாயிற்றே.

(பெரியாழ்வார் திருமொழி - 1.1.1)

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே.
(பெரியாழ்வார் திருமொழி - 1.1.1)

vaNNa maadangal soozh ThirukkottiyUr

kaNNan kEsavan nambi piRandhinil

eNNai chuNNam edhir edhir thoovida

kaNNan mutram kalandhu alaR aayitrE.

(Periyazhvar Thirumozhi - 1.1.1)

When the lord Sri Krishna Kesava was born in Tirukkottiyur of beautiful

mansions they spilled oil and turmeric powder on one another, slushing the portico of Krishna's house.

[பொருள்]

அழகிய மாடங்களாலே சூழப்பட்ட திருக்கோட்டியூரிலே (அதாவது ஸ்ரீ நந்தகோபருடைய இனிய இல்லத்தில்), தாமரைக் கண்ணன், கேசவன், எல்லாவித உன்னதமான குணங்களை உடையவனான கிருஷ்ணன் பிறந்தான். இந்த நற்செய்தியை அறிந்தவுடன் ஏற்பட்ட களிப்பில் (அவனைக் காண அங்கு கூடியிருந்த ஆய்ப்பாடி மக்கள்) மஞ்சள் பொடியையும், எண்ணையையும் ஒருவர்கொருவர் எதிர்த்து தூவ, கண்ணன் வீட்டு முற்றம் சேறாய் விட்டது.

(சொற்பொருள்)

சுண்ணம் - மஞ்சள் பொடி; வாசனைப் பொடி; பூந்தாதுத் தூள்
முற்றம் - வீட்டின் முன்னிடம்
கண்ணன் முற்றம் - கண்ணன் வீட்டு முற்றம்
கண்ணன் முற்றம் => கண் நல் முற்றம் - கண்ணுக்கு அழகாய் விசாலமாய் உள்ள முற்றம்
பிறந்தினில் => இன் இல் பிறந்து - (ஸ்ரீ நந்தகோபருடைய) இனிய இல்லத்தில் பிறந்து
அளறு - சேறு
கேசவன் - அழகிய சுருள் முடியை உடையவன்

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com