ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 2159
திருவாய்மொழி : 8

ஓடும் புள்ளேறி* சூடும் தண்டுழாய்
நீடு நின்றவை* ஆடும் அம்மானே !
(திருவாய்மொழி - 1.8.1)

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்

நீடு நின்றவை ஆடும் அம்மானே !

(திருவாய்மொழி - 1.8.1)

Odum puLLERi soodum thaN thuzhaai
needu ninRavai aadum ammaane !
(Thiruvaimozhi-1.8.1)

Our own Lord, He wears cool Tulasi, rides the Garuda bird and lives with eternals; He joyously accepts and reciprocates the love of His devotees.

[பொருள்]

குளிர்ந்த துளசி மாலை அணிந்த என் சுவாமியானவன், தன் பக்தர்களைக் காக்க கருடன் மீதேறி விரைந்து வருவான். தன் பிரிவை பொறுக்க மாட்டாத அடியார்களுக்கு தரிசனம் தரவும் புள்ளேறி விரைந்து வருவான். அல்லது தனக்கு கைங்கர்யம் செய்ய வேண்டி கருடன் விரும்பினால், அந்த விருப்பை நிறைவேற்ற கருடாரூடனாக உலாவி வருவான். அவ்வாறே தன் சம்பந்தம் பெற நினைக்கும் துளசி மாலையையும் விரும்பி சூடிக்கொள்வான். 'காலம்' என்ற தத்துவம் உள்ள வரையில், இவ்வாறு அவன் தன்னிடம் அன்பு பாராட்ட நினைக்கும் அடியார்களிடம், தன் அன்பினை பரிமாறிக் கொள்வான். என் தலைவனின் இந்த அற்புதமான செயல்கள் என் மனத்தில் நிலைத்து நின்று ஆனந்தம் கொடுக்கும்.

(சொற்பொருள்)

புள் - பறவை (கருடன்)

தண் துழாய் - குளிர்ந்த துளசி

அம்மான் - தலைவன்; சுவாமி

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com