அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:
திருவேங்கடம் (திருப்பதி)
பாசுர எண்: 2733
திருவாய்மொழி
: 10
உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி யம்மானே !
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி ! நெடியாய் அடியே னாருயிரே !*
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே !*
குலதொல் லடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே.
(திருவாய்மொழி - 6.10.1)
உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி அம்மானே !
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி ! நெடியாய் ! அடியேன் ஆருயிரே !
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே !
குலதொல் அடியேன் உனபாதம் கூடும் ஆறு கூறாயே.
(திருவாய்மொழி - 6.10.1)
ulagam unDa peru vaayaa ! ulapil keerththi ammaane !
nilavum sudar soozh oLi moorthy ! nediyaay ! adiyEn aaruyire !
thiladham ulagukkaai ninRa thiruvEngadaththu emperumaanE !
kula thol adiyEn una paadham koodum aaRu kooRaayE.
(Thiruvaimozhi - 6.10.1)
O Lord of eternal glory who swallowed the earth !
O great icon of effulgent knowledge, my soul's Master !
You stand like a "Tilaka for the earth" in Vengadam.
Pray decree that this bonded serf reaches Your lotus feet.
ஊழிக் காலத்தில் ஏற்படும் அழிவில் இருந்து உலகில் உள்ள உயிர்களை எல்லாம் காக்கும் பொருட்டு, பெரிய வாயினால் இந்த உலகத்தை விழுங்கி வயிற்றில் வைத்துக் காக்கும் கருணை வடிவானவனே ! அடியார்களிடம் வாத்சல்யம், அண்டியவர்களுக்கு அபயமளித்தல், உண்மை, வாக்குத் தவறாமை, என்று சகல வித நற்குணங்களும், அவற்றோடு அல்லாமல், காண்போர் கண்ணும், மனமும், உயிரும் பறிபோகும் விதத்தில் அமைந்த வடிவழகும் உடைய என் நாதனே ! உன் கீர்த்திக்கு ஓர் எல்லை இல்லையே ! சுடர் மிக்கதாய் எப்பொழுதும் ஒளிமயமான மூர்த்தியாகக் காட்சி அளிப்பவனே ! உயர்ந்தவனே ! அடியேனுடைய ஆருயிரே ! உலகுக்குத் திலகம் என நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே ! வழி வழியாக உனக்கு அடிமை செய்யும் தொன்மையான குலத்தில் பிறந்த எனக்கு உன் திருவடிகளைப் பிரிந்து உயிர் தரிக்க இயலாது. ஆதலால் உன் திருவடிகளைச் சேரும் உபாயம் என்ன என்று கூற வேண்டும்.
உலப்பு - முடிவு
உலப்பில் கீர்த்தி - உலப்பு இல்லாத பெரும் புகழ்
நிலவும் - எப்பொழுதும் நிலத்திருக்கும்
திலதம் - திலகம்; நெற்றிப் பொட்டு
அம்மான் - தலைவன்; சுவாமி
தொல் - தொன்மை; பழமை
ஆறு - வழி
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com