Blogs

முகுந்தமாலா-3(18)

मुकुन्द  मूर्ध्ना प्रणिपत्य याचे
भवन्त-मेकान्त-मियन्त-मर्थम् |
अविस्मृतिस्त्वच्चरणारविन्दे
भवे भवे  मेsस्तु भवत्प्रसादात् || 3 ||

முகுந்த ! மூர்த்நா ப்ரணிபத்ய யாசே
பவந்த-மேகாந்த-மியந்த-மர்த்தம் |
அவிஸ்ம்ருதிஸ்-த்வச்-சரணாரவிந்தே
பவே பவே மே அஸ்து பவத் ப்ரஸாதாத் || 3 ||

[பொருள்]
ஹே முகுந்தா ! உம்மைத் தலையால் வணங்கி இந்த ஒரே ஒரு பொருளை மட்டும் யாசிக்கிறேன். உம்முடைய அருளால் எனக்கு ஒவ்வொரு பிறவியிலும் உனது திருவடித் தாமரைகளின் மீது மறவாமை இருக்கட்டும்.

[பதவுரை]
முகுந்த - முகுந்தனே !
மூர்த்நா - தலையால்
ப்ரணிபத்ய - வணங்கி
பவந்தம் - உம்மை
இயந்தம் - இவ்வளவு மட்டுமான
ஏகாந்தம் - ஒரே முடிவான
அர்த்தம் - பொருளை
யாசே - யாசிக்கிறேன்
பவத் ப்ரஸாதாத் - உம்முடைய அருளால்
த்வச்-சரணாரவிந்தே - உமது திருவடித் தாமரைகளின் மீது
மே - எனக்கு
பவே பவே - ஒவ்வொரு பிறவியிலும்
அவிஸ்ம்ருதி: - மறவாமை
அஸ்து - இருக்கட்டும்

[ஒப்புநோக்கு]
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு  உற்றோமே ஆவோம்; உமக்கே நாம் ஆட்செய்வோம்" என்ற ஆண்டாள் திருப்பாவையில் அருளியிருப்பதை ஒப்புநோக்கலாம்.

மதுரகவி ஆழ்வார் தனியன்(14)

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறு எங்கள்
வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்.

[பொருள்]
வேதங்களைத் தமிழ் மொழியில் அளித்த குருகூர் சடகோபரான நம்மாழ்வாரே எங்கள் வாழ்வு என்று இருந்த மதுரகவியாழ்வார் எங்கள் சுவாமி ஆவார்.
நம்மாழ்வாரை அன்றி வேறு ஒன்றையும் அடைக்கலமாகக் கொள்ளாத மதுரகவியாழ்வாரே எங்களுக்கு கதியாவார்.

"வண்குருகூர் ஏறு" - ஆதிநாதப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் பெருமை வாய்ந்த திருக்குருகூர் நம்பி (நம்மாழ்வார்)
"வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்" - இதுவும் நம்மாழ்வாரையே குறிக்கும்.
நம்மாழ்வார் அருளிய பிரபந்தங்கள் நான்கு. அவையாவன:
1) திருவிருத்தம்
2) திருவாசிரியம்
3) திருவாய்மொழி
4) பெரிய திருவந்தாதி

இவை நான்கும் வேதங்களின் சாரமாக வைணவப் பெரியோர்களால் கருதப்படுகின்றன.

மதுரகவி ஆழ்வார்(15)

"குருகூர் சடகோபன்" என்று போற்றப்படும் நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வார், திருக்கோளூர் திவ்ய தேசத்தில், சித்திரை மாதம் சித்திரை நன்னாளில் அவதரித்தார்.  உயர்ந்த ஞானமும் வைராக்கியமும் திருமால் பக்தியும் பெற்றவராய் இருந்ததோடு அல்லாமல் செவிக்கினிய கவி பாடுவதிலும் திறன் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். அந்தக் காரணம் பற்றி "மதுரகவி" என்றும் பெயர் பெற்றார்.

இவர் நம்மாழ்வாரை குருவாக அடைந்தது ஓர் சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கிறது. ஒரு முறை வடநாட்டில் உள்ள திவ்ய தேசங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தார். ஒரு சமயத்தில் அயோத்தியில் தங்கி இராம பிரானையும் பிராட்டியையும் மங்களாசாசனம் செய்து வந்த காலத்தில் ஒரு நாள் இரவு, தன் சொந்த ஊரான திருக்கோளூர் பெருமான் நினைவு பெற்றவராய் தெற்கு நோக்கி தொழுதார். அப்பொழுது வானில் ஒரு அதிசயமான ஒளிக்கற்றையை கண்ணுற்றார். இந்த நிகழ்ச்சி அடுத்த சில நாட்களும் தொடர்ந்து நடைபெற, அந்த அற்புதமான ஜோதி தனக்கு ஏதோ செய்தி தெரிவிப்பதாக உணர்ந்தார். தொடர்ந்து அந்த அதிசயமான ஜோதி தெற்கு நோக்கி பயணம் செய்வதை உணர்ந்து, தெய்வத்தின் செயல் என எண்ணி அதனை பின் தொடர்ந்தார்.

பல நாட்கள் கழித்து திருக்கோளூர் அருகில் உள்ள தென் குருகூர் நகரை அடைந்தார்.  "இந்த ஊரில் என்ன  விசேஷம்?" என்று ஊர் மக்களை வினவ,  அவர்கள் "ஆதிநாதர் கோயிலில் புளிய மரம் விசேஷம். நீரே சென்று காணும்" என்று பதில் உரைக்க உடனே கோயிலுக்கு விரைந்து  சென்று ஓர் அதிசயத்தைக் கண்டார். புளிய மரத்தின் பொந்தில் இருந்து கொண்டு, சாதாரணமாக உயிர்களுக்கு ஏற்படும் பசி, தாகம் எதுவும் இல்லாமல்,  எப்பொழுதும்  இறையனுபவத்தில் திளைத்திருந்த நம்மாழ்வாரைக் கண்டார். கண்ட மாத்திரத்தில் பிறவிப் பயனை அடைந்தோம் என்று பேருவகை எய்தினார். நம்மாழ்வாருடன் உரையாடல் மேற்கொண்டு, ஆத்ம தத்துவம் குறித்து அதுகாறும் தனக்கு இருந்த அக்ஞானம் நீங்கப் பெற்றவராய், "அடியேனை ஆட்கொண்டு அருள வேண்டும்" என்று நம்மாழ்வாரிடம் சரணம் அடைந்தார்.

நம்மாழ்வாரும் உயர்ந்த சீடன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்து, "நாம் பகவானை அனுபவித்தற்குப் போக்குவீடாகச் சொல்லும் பாசுரங்களை நீர் ஓலைப்படுத்தும்" என்று  திருவாய் மலர்ந்தருளினார்.மதுரகவியாரும், நம்மாழ்வாரின் அருளிச்செயல்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்று நான்கு பிரபந்தங்களை  ஓலைகளில் எழுதினார். இவை நான்கும் வேத சாரமாக கருதப்படுகின்றன.

"மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்"
என்பது மதுரகவி ஆழ்வார் வாக்கு.

மதுரகவியாருக்கு நம்மாழ்வார் பாசுரங்களில் மிகுந்த பற்றுதல் உண்டாயிற்று. நாளடைவில்  நம்மாழ்வார் தமக்கு செய்த மாபெரும் அனுக்ரஹத்தை நினைந்து உருகி அவரைக் குறித்து பதினோரு பாசுரங்களால் ஆன ஒரு பாமாலை இயற்றினார். அப்பாமாலையின் முதற்பா, "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்று தொடங்குவதால் அதற்கு  "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்பது பெயராயிற்று.

நம்மாழ்வார் பெயரை உரைக்கும் மாத்திரத்திலே தன் நாவில் அமுதம் ஊறுகின்றது என்றும் ("தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே ..."), "இன்று தொட்டு எழுமையும் தன் புகழ் ஏத்த அருளினான்" என்றும் நம்மாழ்வாரின் புகழையே பாடிக் களித்து, மதுரகவியார் தமது ஆசார்யரான நம்மாழ்வாரிடம் ஆழங்கால் பட்டு  "மதுரகவி ஆழ்வார்" ஆனார்.

இவருக்கு பிறகு நம்மாழ்வாரின் பாசுரங்களை இவரது சீடர்கள் அனுசந்தித்து வந்தார்கள்.  எனினும் நாளடைவில் அவை வழக்கில் இருந்து காணாமல் போயின. பின்னாளில் ஆசார்யர் நாதமுனிகள், குருகூரை அடைந்து இவரது மரபில் வந்த  சீடர்களிடம் "கண்ணிநுண் சிறுதாம்பு" பிரபந்தத்தை (பதினோரு பாசுரங்கள்) மட்டும் அறிந்து கொண்டு, அதனை பன்னிரண்டு ஆயிரம் முறை ஓதி நம்மாழ்வார் அருளினைப் பெற்று நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மீட்டார்  என்பது வைணவ சம்பிரதாயம்.

திருமால் நாமாவளி-ஆண்டாள் படி(1)(12)

(திருப்பாவை - 1 )

1 . நந்தகோபன் குமரன்

2 . யசோதை இளஞ்சிங்கம்

3 . கார்மேனியன்

4 . செங்கண்(ணன்)

5 . கதிர் மதிய முகத்தான்

6 . நாராயணன்

(திருப்பாவை - 2 )

7 . பாற்கடலில் பையத் துயின்றோன்

8 . பரமன்

(திருப்பாவை - 3 )

9 . ஓங்கி உலகளந்தோன்

10 . உத்தமன்

(திருப்பாவை - 4 )

11 . ஆழி மழைக் கண்ணன்

12 . ஊழி முதல்வன்

13 . பாழியந் தோளுடையோன்

14 . பற்பநாபன் (பத்மநாபன்)

(திருப்பாவை - 5 )

15 . மாயன்

16 . வடமதுரை மைந்தன்

17 . யமுனைத் துறைவன்

18 . ஆயர் குலத்தோன்

19 . அணி விளக்கு

20. தாயைக் குடல் விளக்கம் செய்தோன்

21 . தாமோதரன்

22. போய பிழையும் புகு தருவான்

(திருப்பாவை - 6 )

21 . புள்ளரையன்

22 . பேய் முலை நஞ்சுண்டான்

23 . கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சியவன்

24 . வெள்ளத்தரவில் துயில் அமர்ந்தோன்

25 . வித்து

(திருப்பாவை - 7 )

26 . நாராயணன் மூர்த்தி

27 . கேசவன்

(திருப்பாவை - 8 )

28 . மாவாய் பிளந்தான்

29 . மல்லரை மாட்டியோன்

30 . தேவாதி தேவன்

(திருப்பாவை - 9 )

31 . மா மாயன்

32 . மாதவன்

33 . வைகுந்தன்

34 . நாமம் பல உடையோன்

(திருப்பாவை - 10 )

35 . நாற்றத் துழாய் முடியன்

36 . நாராயணன்

37 . போற்ற பறை தருவான்

38 . புண்ணியன்

(திருப்பாவை - 11 )

39 . குற்றம் ஒன்று இல்லாதவன்

40 . கோவலன்

41 . முகில் வண்ணன்

(திருப்பாவை - 12 )

43 . தென்னிலங்கைக் கோமானைச் செற்றவன்

44 . மனதுக்கினியான்

(திருப்பாவை - 13 )

45 . புள்ளின் வாய் கீண்டான்

46 . பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்

(திருப்பாவை - 14 )

47 . சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

48 . பங்கயக் கண்ணான்

(திருப்பாவை - 15 )

49 . வல் ஆனை கொன்றான்

50 . மாற்றாரை மாற்றழிக்க வல்லான்

51 . மாயன்

(தொடரும்)

கம்ப ராமாயணம் - நீ, நான் மற்றும் கம்பர்(10)


பாலகாண்டம் - கடவுள் வாழ்த்து

http://soundcloud.com/meenakshi-sundaram-murali/sets/bala-kandam-kadavul-vazhthu/

பாடல்களை படிக்க - கீழுள்ள சுட்டி

http://www.chennailibrary.com/kambar/bala/aatruppadalam.html

இராமனின் தோள் வலிமை(9)

அலை உருவக் கடல் உருவத்து ஆண் தகைதன் நீண்டு உயர்ந்த
நிலை உருவப் புய வலியை நீ உருவ நோக்கு ஐயா!
உலை உருவக் கனல் உமிழ் கண் தாடகைதன் உரம் உருவி,
மலை உருவி, மரம் உருவி, மண் உருவிற்று, ஒரு வாளி!

(பாலகாண்டம் - வரலாற்றுப் படலம்)

இடம்: மிதிலை, ஜனகர் சபை
இராமர் வேள்வி காத்த திறத்தினை விசுவாமித்திரர் ஜனகருக்கு மொழிதல்.

"அரசே! அலைகளின் வடிவமாக தோன்றுகிற கடல் போன்ற கரிய திருமேனி உடைய, ஆண்மை குணமுடைய, நீண்டு உயர்ந்து நிலையான இயற்கை அழகு உடைய தோள்களின் பலத்தை நீ நன்றாக நோக்குவாயக! இந்த இராமனின் ஒரு அம்பு தானே உளை களத்தின் நெருப்பை சொரிகின்ற கண்களை உடைய தாடகையின் மார்பை துளைத்து , அடுத்து நின்ற மலைகளையும் துளைத்து, பல மரங்களையும் துளைத்து, அதன் பின் பூமியையும் துளைத்து நின்றது."

Viswamithrar explaining strength of Lord Rama to Janakar. Kambar's description of Arrow.. simulates speed, strength and action is fantastic

Typing in Tamizh(7)

Dear Readers,

Many of us may want to share our thoughts in our mother-tongue. There are many online transliteration tools to facilitate the same.

The following post describes how we can use Google transliteration facility to type in Tamizh language.

1) Go to the link:

http://www.google.com/inputtools/cloud/try/

Click to enlarge the above image.

2) You should be seeing an editor window. The language tab shows the default language as English. Click on the tab and choose the language as Tamil.

Click to enlarge the above image

3) Start typing in the editor window. You should start seeing the transliterated text presented as various options in a small drop-down box.

Click to enlarge the above image.

4) In the images below, one can view the transliteration text output for the words Krishna, Rama and Arangaa.

Click to enlarge the above image.

Click to enlarge the above image.

Click to enlarge the above image.

5) We can now copy-paste the text to another document (or) e-mail (or) chat windows by using standard copy-paste techniques.

Mouse over the text to select the portion for copying (or) use Ctrl-a to select all the text. Issue Ctrl-c to copy and Ctrl-v to paste.

Click to enlarge the above image.

பிரபந்தம் - உரை நூல்கள்(8)

Dear Readers,
This post is an informative post. Many devotees are interested in knowing about books on Divya Prabandham and this post attempts to provide some details on that account, purely in the notion of service. Please note that STD Pathasala does not have any preference or bias towards any of the publishers or authors or books mentioned below. Also please note that STD Pathasala has its own publication, the details of which are provided below.

Tamil Original with English Meaning


Name: The Sacred Book of Four Thousand
Nalayira Divya Prabandham Rendered in English with Tamil Original
Author: Selvamudaiyanpettai Araiyar Sri Rama Bharati
Based On: Commentaries of Purvacharyas
Available at: STD Pathasala
Address:
Sri Sadagopan TiruNarayanaswami Divya Prabandha Pathasala,
Jaladampet, Chennai - 601 302
Ph: +91 44 22462436, 22460008

தமிழ் உரை நூல்கள்
ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களுக்கு ஆசார்யர்கள் அருளிய உரை நூல்கள் நிறைய உள்ளன.
பெரியவாச்சான் பிள்ளை உரை நூல்கள், பகவத் விஷயம் (திருவாய்மொழி), ஆகியவற்றை அனுபவிக்க ஸமஸ்க்ருத ஞானம் நிறைய தேவைப்படுவதால் 'ஆசார்யர் வழியாகப் படிப்பது' என்ற முறை பரிந்துரைக்கப்படுகிறது. தமிழ், வடமொழி புலமை நன்கு வாய்த்தவர்கள் தாங்களாகவே உரைகளைப் புரிந்து அனுபவிக்கலாம். ஏனையோர், பெரியவர்களை அணுகி அனுபவிப்பது எளிதாம்.

பூர்வாசார்யர்கள் உரை நூல்களை அணுகுவதற்கு முன் நாமாகவே படித்து பொருள் கொள்ள கீழ்கண்ட நூல்கள் இன்றைக்கு கிடைக்கின்றன.

1) நூற்பெயர்: பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் (இரண்டு பாகங்கள்)
உரையாசிரியர்: முனைவர் த. கோவேந்தன்
பதிப்பாசிரியர்கள்: நதிக்குடி ஸ்ரீ ரங்க முத்துசீனிவாசன், காவனூர் அரு. குப்புசாமி
வெளியிடுவோர்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
முகவரி:
ப.எண், 32-B, கிருஷ்ணா தெரு
பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை - 600 017
தொலைபேசி: 044-24331510
ஈ.மெயில் முகவரி: shreeshenbaga@yahoo.com

2) Title: Sri Nalayira Divya Prabandham (4 volumes)
Commentators: Thiru Ramasubramania Sarma & TMT.R.Ponnammal
Language: Tamil
Published by: Gangai Puthaka Nilayam
Address: 13, Deenadayalu Street,
Thyagaraya Nagar,
Chennai - 600 017
Ph: +91 44 24342810 / 24310769

3) நூற்பெயர்: நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (நான்கு பாகங்கள்)
உரையாசிரியர்: டாக்டர் எம்.நாராயண வேலுப்பிள்ளை
பதிப்பாசிரியர்: வி.எஸ்.வி. இராகவதாசன்
பதிப்புரிமை: முல்லை நிலையம்
வெளியிடுவோர்: முல்லை நிலையம்
முகவரி:
9, பாரதி நகர், முதல் தெரு,
தி.நகர், சென்னை-600 017

4) நூலின் பெயர்: ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் என்னும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
உரையாசிரியர்: கலவை புலவர் த. திருவேங்கட இராமானுஜதாசன்
மொழி: தமிழ்
பதிப்புரிமை: உமா பதிப்பகம்
முகவரி:
171, (புதிய எண். 18) பவளக்காரத் தெரு
மண்ணடி, சென்னை - 600 001
தொலைபேசி: 2521 5363, 2525 0092

ஸ்ரீ மதே ராமானுஜாய நம:

கம்ப ராமாயணம் - கடவுள் வாழ்த்து(6)

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1

சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2

ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன - மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். 3

நாலாயிரம் - சில குறிப்புகள்(5)

ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத்தில் உள்ள பல்வேறு பிரபந்தங்களின் பெயர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு. (நன்றி: திருவேங்கடத்தான் திருமன்றம் ட்ரஸ்ட்)

Sl Num வகை/காரணம் பிரபந்தம்
1 ஆரம்ப வார்த்தைகளால் பெயர் பெற்றவை திருப்பல்லாண்டு அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுத்தாம்பு
2 அந்தாதித் தொடையால் பெயர் பெற்றவை முதல் திருவந்தாதி இரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி
3 ஆரம்ப வார்த்தைகளாலும் அந்தாதித் தொடையாலும் பெயர் பெற்றது நான்முகன் திருவந்தாதி
4 பாடியவர்களாற் பெயர் பெற்றவை பெரியாழ்வார் திருமொழி நாச்சியார் திருமொழி பெருமாள் திருமொழி
5 அளவால் பெயர் பெற்றவை பெரிய திருமொழி திருவெழுகூற்றிருக்கை
6 பாவாற் பெயர் பெற்றவை திருவாசிரியம் திருச்சந்த விருத்தம் திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம்
7 செயலாற் பெயர் பெற்றவை திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி
8 தன்மையால் பெயர் பெற்றவை திருவிருத்தம் சிறிய திருமடல் பெரிய திருமடல் திருமாலை
9 சிறப்பால் பெயர் பெற்றது திருவாய்மொழி

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com