அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடையவர்கள்;
அவரவர் இறையவர் குறைவு இலர்; இறையவர்

அவரவர் விதி வழி அடைய நின்றனரே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்,
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்,
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்;

என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

திடவிசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய், அவை அவை தொறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்,

சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய், அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து, அமரர்க்கும் அறிவியந்து,

அரன் அயன் என, உலகு அழித்து அமைத்து உளனே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

உளன் எனில் உளன், அவன் உருவம் இவ் உருவுகள்;
உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள்;
உளன் என, இலன் என, இவை குணம் உடைமையில்,

உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என:நிலம் விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்

கரந்து, எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

கர விசும்பு எரி, வளி, நீர், நிலம் இவைமிசை
வரன் நவில், திறல், வலி, அளி, பொறை ஆய்நின்ற
பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல்

நிரல்-நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com