அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தத்துக் கொண்டாள் கொலோ ? தானே பெற்றாள் கொலோ ?

சித்தம் அனையாள் அசோதை இளஞ் சிங்கம்

கொத்துஆர் கருங்குழற் கோபால கோளரி

அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் ;

அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கொங்கை வன் கூனிசொற் கொண்டு குவலயத்

துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்

எங்கும் பரதற்கு அருளி, வன்கான் அடை

அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் ;

அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பதக முதலைவாய்ப் பட்ட களிறு

கதறிக் கைகூப்பி என் கண்ணா ! கண்ணா ! என்ன

உதவப் புள் ஊர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த

அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்;

அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வல்லாள் இலங்கை மலங்கச் சரந் துரந்த

வில்லாளனை விட்டுசித்தன் விரித்த

சொல் ஆர்ந்த அப்பூச்சிப் பாடல் இவை பத்தும்

வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அரவு அணையாய் ! ஆயர் ஏறே !

அம்மம் உண்ணத் துயிலெழாயே !

இரவும் உண்ணாது உறங்கி நீ போய்,

இன்றும் உச்சி கொண்டதாலோ ;

வரவுங் காணேன் ; வயிறு அசைந்தாய் ;

வன முலைகள் சோர்ந்து பாயத்

திரு உடைய வாய்மடுத்துத்

திளைத்து உதைத்துப் பருகிடாயே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வைத்த நெய்யும் காய்ந்த பாலும்

வடி தயிரும் நறு வெண்ணெயும்

இத்தனையும் பெற்றறியேன்

எம்பிரான் நீ பிறந்த பின்னை;

எத்தனையும் செய்யப் பெற்றாய்;

ஏதும் செய்யேன், கதம் படாதே;

முத்து அனைய முறுவல் செய்து

மூக்கு உறிஞ்சி முலை உணாயே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தந்தம் மக்கள் அழுது சென்றால்

தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்;

வந்து நின்மேல் பூசல் செய்ய

வாழ வல்ல வாசுதேவா !

உந்தையார் உன்திறத்தர் அல்லர்

உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்;

நந்தகோபன் அணி சிறுவா !

நான் சுரந்த முலை உணாயே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட

கள்ளச் சகடு கலக்கு அழிய,

பஞ்சி அன்ன மெல்லடியால்

பாய்ந்த போது நொந்திடும் என்று

அஞ்சினேன் காண் ; அமரர் கோவே !

ஆயர் கூட்டத்து அளவன்றாலோ!

கஞ்சனை உன் வஞ்சனையால்

வலைப்படுத்தாய் ! முலை உணாயே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தீய புந்திக் கஞ்சன் உன்மேல்

சினம் உடையன் சோர்வு பார்த்து

மாயந்தன்னால் வலைப்படுக்கில் ,

வாழகில்லேன் , வாசுதேவா !
தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்
சாற்றிச் சொன்னேன் , போக வேண்டா ;
ஆயர் பாடிக்கு அணிவிளக்கே !
அமர்ந்து வந்து என் முலை உணாயே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தீய புந்திக் கஞ்சன் உன்மேல்

சினம் உடையன் சோர்வு பார்த்து

மாயந்தன்னால் வலைப்படுக்கில் ,

வாழகில்லேன் , வாசுதேவா !
தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்
சாற்றிச் சொன்னேன் , போக வேண்டா ;
ஆயர் பாடிக்கு அணிவிளக்கே !
அமர்ந்து வந்து என் முலை உணாயே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com