அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்

கடிகமழ் பூங்குழலார்கள்

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்

பெருமானே ! எங்கள் அமுதே !

உண்ணக் கனிகள் தருவன் , கடிப்பு ஒன்றும்

நோவாமே காதுக்கு இடுவன்;

பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட

பற்பநாபா ! இங்கே வாராய் .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து

வலியவே காதிற் கடிப்பை

நோவத் திரிக்கில், உனக்கு இங்கு இழுக்குற்று என்?

காதுகள் நொந்திடும், கில்லேன் ;

நாவற் பழம் கொண்டு வைத்தேன், இவை காணாய் ;

நம்பீ ! முன் வஞ்ச மகளைச்

சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட

தாமோதரா ! இங்கே வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வார்காது தாழப் பெருக்கி அமைத்து

மகரக்குழை இட வேண்டிச்
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்
சிந்தையுள் நின்று திகழப்
பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன்
பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார்
அச்சுதனுக்கு அடியாரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வெண்ணைய் அளைந்த குணுங்கும்

விளையாடு புழுதியும் கொண்டு

திண்ணென இவ் இரா உன்னைத்

தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் ;

எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு

எத்தனை போதும் இருந்தேன்;

நண்ணல் அரிய பிரானே !

நாரணா ! நீராட வாராய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வெண்ணைய் அளைந்த குணுங்கும்

விளையாடு புழுதியும் கொண்டு

திண்ணென இவ் இரா உன்னைத்

தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் ;

எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு

எத்தனை போதும் இருந்தேன்;

நண்ணல் அரிய பிரானே !

நாரணா ! நீராட வாராய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கன்றுகள் ஓடச் செவியில்

கட்டெறும்பு பிடித்து இட்டால்,

தென்றிக் கெடும் ஆகில் வெண்ணெய்

திரட்டி விழுங்குமா காண்பன்;

நின்ற மராமரம் சாய்த்தாய் !

நீ பிறந்த திருவோணம்

இன்று நீ நீராட வேண்டும்,

எம்பிரான் ! ஓடாதே வாராய்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பேய்ச்சி முலை உண்ணக் கண்டு

பின்னையும் நில்லாது என் நெஞ்சம்,

ஆய்ச்சியர் எல்லாரும் கூடி

அழைக்கவும் நான் முலை தந்தேன்;

காய்ச்சின நீரொடு நெல்லி

கடாரத்தில் பூரித்து வைத்தேன்;

வாய்த்த புகழ் மணிவண்ணா!

மஞ்சனம் ஆட நீ வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கஞ்சன் புணர்ப்பினில் வந்த

கடிய சகடம் உதைத்து

வஞ்சகப் பேய்மகள் துஞ்ச

வாய் முலை வைத்த பிரானே !

மஞ்சளும் செங்கழுநீரின்

வாசிகையும் நாறுசாந்தும்

அஞ்சனமும் கொண்டு வைத்தேன்;

அழகனே ! நீராட வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அப்பம் கலந்த சிற்றுண்டி

அக்காரம் பாலிற் கலந்து

சொப்பட நான் சுட்டு வைத்தேன்,

தின்னல் உறுதியேல்; நம்பி !

செப்பு இள மென்முலையார்கள்

சிறுபுறம் பேசிச் சிரிப்பர்;

சொப்பட நீராட வேண்டும்,

சோத்தம், பிரான் ! இங்கே வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

எண்ணெய்க் குடத்தை உருட்டி

இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்

கண்ணைப் புரட்டி விழித்துக்

கழகண்டு செய்யும் பிரானே!

உண்ணக் கனிகள் தருவன் ;

ஒலிகடல் ஓதநீர் போலே

வண்ணம் அழகிய நம்பீ !

மஞ்சனம் ஆட நீ வாராய்.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com