அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கறந்த நற்பாலும் தயிரும்
கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப்
பெற்றறியேன், எம்பிரானே !
சிறந்த நற்றாய் அலர் தூற்றும்
என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன் !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கன்றினை வால் ஓலை கட்டி
கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்
பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்;
நின்திறத்தேன் அல்லேன், நம்பீ !
நீ பிறந்த திரு நன்னாள்,
நன்று நீ நீராட வேண்டும் ;
நாரணா ! ஓடாதே வாராய்.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
பூணித் தொழுவினிற் புக்குப்
புழுதி அளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன்,
ஆகிலும் கண்டார் பழிப்பர் ;
நாண் இத்தனையும் இலாதாய் !
நப்பின்னை காணிற் சிரிக்கும்;
மாணிக்கமே ! என் மணியே !
மஞ்சனம் ஆட நீ வாராய்.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து
வார் மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்
பார் மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே .
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
பின்னை மணாளனை பேரிற் கிடந்தானை,
முன்னை அமரர் முதற் தனி வித்தினை,
என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட
மன்னனை, வந்து குழல்வாராய், அக்காக்காய்!
மாதவன்தன் குழல்வாராய், அக்காக்காய் !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
பேயின் முலை உண்ட பிள்ளை இவன், முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்,
காயாமலர் வண்ணன் ; கண்ணன் கருங்குழல்
தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்!
தூமணி வண்ணன் குழல்வாராய், அக்காக்காய்!
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
திண்ணக் கலத்தில் திரை உறிமேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல்: அமரர் பெருமானை , ஆயர்தம்
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு,
புள்இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்து குழல்வாராய், அக்காக்காய்!
பேய் முலை உண்டான் குழல்வாராய், அக்காக்காய்!
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்
பற்றி எறிந்த பரமன் திருமுடி,
உற்றன் பேசி நீ ஓடித் திரியாதே,
அற்றைக்கும் வந்து குழல்வாராய், அக்காக்காய் !
ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய் !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கிழக்கிற் குடி மன்னர் கேடு இலாதாரை
அழிப்பான் நினைந்திட்டு அவ் ஆழி அதனால்
விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானைக்
குழற்கு அணி ஆகக் குழல்வாராய் ! அக்காக்காய்!
கோவிந்தன் தன் குழல்வாராய் , அக்காக்காய்!
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com