அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆலத்து இலையான் அரவின் அணை மேலான் ,
நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான் ;
பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள்செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா,
குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பொன்திகழ் சித்திரகூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா,
மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மின்னிடைச் சீதை பொருட்டா, இலங்கையர்
மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழத்
தன் நிகர் ஒன்று இல்லாச் சிலை கால் வளைத்து இட்ட
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா,
வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து
மின் இலங்கும் பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கும் நாமத்து அளவும் அரசு என்ற
மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா,
வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வா என்று
மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர்ப் பட்டன்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆனிரை மேய்க்க நீ போதி ,
அருமருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன்
கரிய திருமேனி வாட:
பானையிற் பாலைப் பருகிப்
பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே!
செண்பகப் பூச் சூட்ட வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கரு உடை மேகங்கள் கண்டால்
உன்னைக் கண்டால் ஒக்கும்; கண்கள்
உரு உடையாய் ! உலகு ஏழும்
உண்டாக வந்து பிறந்தாய் !
திரு உடையாள் மணவாளா !
திருவரங்கத்தே கிடந்தாய் !
மருவி மணம் கமழ்கின்ற
மல்லிகைப் பூச் சூட்ட வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மச்சொடு மாளிகை ஏறி
மாதர்கள்தம் இடம் புக்கு ,
கச்சொடு பட்டைக் கிழித்து ,
காம்பு துகில் அவை கீறி ,
நிச்ச்லும் தீமைகள் செய்வாய் !
நீள் திருவேங்கடத்து எந்தாய் !
பச்சைத் தமனகத்தோடு
பாதிரிப் பூச் சூட்ட வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி
மார்களைத் தீமை செய்யாதே.
மருவும் தமனகமும் சீர்
மாலை மணம் கமழ்கின்ற ;
புருவம் கருங்குழல் நெற்றி
பொலிந்த முகிற்கன்று போலே
உருவம் அழகிய நம்பீ !
உகந்து இவை சூட்ட நீ வாராய்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

புள்ளினை வாய் பிளந்திட்டாய் !
பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் !
கள்ள அரக்கியை மூக்கொடு
காவலனைத் தலை கொண்டாய் !
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க
அஞ்சாது அடியேன் அடித்தேன்;
தெள்ளிய நீரில் எழுந்த
செங்கழுநீர் சூட்ட வாராய்

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com