அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்

செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக்

குறுவெயர்ப் புருவம் கூடலிப்பக்

கோவிந்தன் குழல்கொடு ஊதின போது ,

பறவையின் கணங்கள் கூடு துறந்து

வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்

கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்

கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்

செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே

சுருண்டு இறுண்ட குழல் தாழ்ந்த முகத்தான்

ஊதுகின்ற குழல்ஓசை வழியே ,

மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து

மேய்ந்த புல்லும் கடவாய் வழி சோர

இருண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா

எழுது சித்திரங்கள் போல நின்றனவே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கருங்கண் தோக மயிற் பீலி அணிந்து

கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை

அருங்கல உருவின்ஆயர் பெருமான்

அவனொருவன் குழல் ஊதினபோது,

மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்;

மலர்கள் வீழும் ; வளர் கொம்புகள் தாழும் ,

இரங்கும் , கூம்பும் ; திருமால் நின்ற நின்ற

பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்

கோவிந்தனுடைய கோமள வாயிற்

குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்

கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்

குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்

விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்

குழலை வென்ற குளிர் வாயினராகிச்

சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஐய புழுதி உடம்பு அளைந்து இவள்

பேச்சும் அலந்தலையாய்ச்

செய்ய நூலின் சிற்றாடை செப்பன்

உடுக்கவும் வல்லள் அல்லள்;

கையினில் சிறுதூதை யோடு இவள்

முற்றில் பிரிந்தும் இலள்

பை அரவணைப் பள்ளியானொடு

கைவைத்து இவள்வருமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வாயிற் பல்லும் எழுந்தில ;
மயிரும் முடி கூடிற்றில;
சாய்வு இலாத குறுந்தலைச் சில
பிள்ளைகளோடு இணங்கி
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள்
தன் அன்ன செம்மை சொல்லி
மாயன் மணிவண்ணன்மேல் இவள்
மால் உறுகின்றாளே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும்

முற்றத்து இழைக்கலுறில்

சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும்

அல்லது இழைக்கலுறாள்;

கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில ;
கோவிந்தனோடு இவளைச்
சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும்
தட்டுளுப்பு ஆகின்றதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என்

பெண்மகளை எள்கி,

தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த

சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்?

ஆழியான் என்னும் ஆழ மோழயில்

பாய்ச்சி அகப்படுத்தி

மூழை உப்பு அறியாது என்னும்

மூதுரையும் இலளே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நாடும் ஊரும் அறியவே போய்

நல்ல துழாய் அலங்கல்

சூடி நாரணன் போம் இடம் எல்லாம்

சோதித்து உழிதருகின்றாள்;

கேடு வேண்டுகின்றார் பலர் உளர்,

கேசவனோடு இவளைப்

பாடுகாவல் இடுமின் என்று என்று

பார் தடுமாறினதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது


பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள்

பாடகமும் சிலம்பும்

இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு

என்னோடு இருக்கலுறாள்;

பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள்

பூவைப் பூவண்ணா ! என்னும் ;

வட்ட வார் குழல் மங்கைமீர் ! இவள்

மால் உறுகின்றாளே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com