அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

தூ நிலமுற்றத்தே போந்து விளையாட

வான் நிலா அம்புலீ ! சந்திரா ! வா என்று

நீ நிலா, நின் புகழா நின்ற ஆயர்தம்

கோ நிலாவக், கொட்டாய் சப்பாணி , குடந்தைக் கிடந்தானே ! சப்பாணி.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து

அட்டி அமுக்கி அகம் புக்கு, அறியாமே,

சட்டித்தயிரும்தடாவினில் வெண்ணெயும் உண்

பட்டிக் கன்றே ! கொட்டாய் சப்பாணி, பற்பநாபா ! கொட்டாய் சப்பாணி.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது

போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆளப்

பாரித்த மன்னர் படப் பஞ்ச்வர்க்கு அன்று

தேர் உய்த்த கைகளால் சப்பாணி, தேவகி சிங்கமே ! சப்பாணி.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை

இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோதக்

கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச்

சரந் தொட்ட கைகளால் சப்பாணி , சார்ங்க விற் கையனே ! சப்பாணி.

(பெரியாழ்வார் திருமொழி - 1.7.7)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

குரக்கு இனத்தாலே குரைகடல் தன்னை

நெருக்கி அணை கட்டி நீள்நீர் இலங்கை

அரக்கர் அவிய அடு கணையாலே

நெருக்கிய கைகளால் சப்பாணி,நேமியங் கையனே ! சப்பாணி.

(பெரியாழ்வார் திருமொழி - 1.7.8)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

அளந்து இட்ட தூணை அவன் தட்ட, ஆங்கே

வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய்

உளந் தொட்டு, இரணியன் ஒண்மார்வு அகலம்

பிளந்திட்ட கைகளால் சப்பாணி , பேய் முலை உண்டானே ! சப்பாணி.

(பெரியாழ்வார் திருமொழி - 1.7.9)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல்தன்னை
மிடைந்திட்டு , மந்தரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி , வாசுகி வன்கயிறு ஆகக்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி , கார்முகில் வண்ணனே ! சப்பாணி.

(பெரியாழ்வார் திருமொழி - 1.7.10)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவினை

நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன்

வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே

(பெரியாழ்வார் திருமொழி - 1.7.11)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

தொடர் சங்கிலிகை சலார் - பிலார் என்னத்
தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம்
பைய நின்று ஊர்வது போல் ,
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப
உடை மணி பறை கறங்க
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி
தளர்நடை நடவானோ !

(பெரியாழ்வார் திருமொழி - 1.8.1)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும்
சிறுபிறை முளைப் போல
நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே
நளிர் வெண்பல் முளை இலக ,
அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி
பூண்ட அனந்தசயனன்
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்
தளர்நடை நடவானோ !

(பெரியாழ்வார் திருமொழி - 1.8.2)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com