அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்
கரு நிறச் செம் மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான்
என்பது ஓர் வார்த்தையும் உண்டு;
மஞ்சு தவழ் மணி மாட
மதிள் திருவெள்ளறை நின்றாய்!
அஞ்சுவன் நீ அங்கு நிற்க,
அழகனே ! காப்பிட வாராய் .
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கள்ளச் சகடும் மருதும்
கலக்கு அழிய உதைசெய்த
பிள்ளையரசே! நீ பேயைப்
பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ;
ஒளியுடை வெள்ளறை நின்றாய் !
பள்ளிகொள் போது இது ஆகும் ;
பரமனே ! காப்பிட வாராய்
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
இன்பம் அதனை உயர்த்தாய் !
இமையவர்க்கு என்றும் அரியாய்!
கும்பக் களிறு அட்ட கோவே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு
எழில் மறையோர் வந்து நின்றார் ;
தருக்கேல், நம்பி ! சந்தி நின்று,
தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள் ;
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த,
தேசு உடை வெள்ளறை நின்றாய் !
உருக் காட்டும் அந்தி விளக்கு இன்று
ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
போது அமர் செல்வக்கொழுந்து
புணர் திருவெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த அசோதை
மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல
விட்டுசித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல
பத்தர் உள்ளார் வினை போமே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை
வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும்;
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்
காக்கில்லோம் , உன்மகனைக் காவாய்;
புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை
புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற
அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய்.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
வருக, வருக ,வருக இங்கே,
வாமன நம்பீ ! வருக இங்கே.
கரிய குழல் செய்ய வாய் முகத்து
காகுத்த நம்பீ ! வருக இங்கே.
அரியன் இவன் எனக்கு இன்று , நங்காய்!
அஞ்சனவண்ணா ! அசலகத்தார்
பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்;
பாவியேனுக்கு இங்கே போதராயே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு
தேக்கம் ஒன்றும் இலன், தேசு உடையன்,
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்
உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்;
அருகு இருந்தார் தம்மை அநியாயம்
செய்வதுதான் வழக்கோ ? அசோதாய் !
வருக என்று உன்மகனைதன்னைக் கூவாய்
வாழ ஒட்டான் மதுசூதனனே .
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கொண்டல்வண்ணா ! இங்கே போதராயே
கோயிற் பிள்ளாய்! இங்கே போதராயே.
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த
திருநாரணா ! இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி
ஓடி அகம் புக, ஆய்ச்சிதானும்
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்
கண்ணபிரான் கற்ற கல்வி தானே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்
பல்வளையாள் என்மகள் இருப்ப,
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச்
சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமம் உடைய நம்பி
சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்;
ஆலைக் கரும்பின் மொழி அனைய
அசோதை நங்காய் ! உன்மகனைக் கூவாய் .
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com