அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காடுகள் ஊடு போய் கன்றுகள் மேய்த்து

மறியோடி கார்க்கோடற்பூச்

சூடி வருகின்ற தாமோதரா! கற்றுத்

தூளி காண் உன் உடம்பு ;

பேடை மயிற் சாயற் பின்னை மணாளா !

நீராட்டு அமைத்து வைத்தேன்;

ஆடி அமுதுசெய், அப்பனும் உண்டிலன்,

உன்னோடு உடனே உண்பான்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கடி ஆர் பொழில் அணி வேங்கடவா ! கரும்

போரேறே ! நீ உகக்கும்

குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக்

கொள்ளாதே போனாய், மாலே !

கடிய வெங் கானிடைக் கன்றின்பின் போன

சிறுக்குட்டச் செங் கமல

அடியும் வெதும்பி உன்கண்கள் சிவந்தாய்,

அசைந்திட்டாய் ; நீ எம்பிரான் !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பற்றார் நடுங்க முன் பாஞ்சன்னியத்தை

வாய் வைத்த போரேறே ! என்

சிற்றாயர் சிங்கமே ! சீதை மணாளா !

சிறுக்குட்டச் செங்கண் மாலே !

சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை

கட்டிலில் மேல் வைத்துப் போய்,

கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்

கலந்து உடன் வந்தாய் போலும்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும்

அழகா ! நீ பொய்கை புக்கு

நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்,

நான் உயிர் வாழ்ந்திருந்தேன் ;

என்செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ?
ஏதும் ஓர் அச்சம் இல்லை ;
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் ,
காயாம்பூ வண்ணம் கொண்டாய் !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய

பாற்கடல் வண்ணா ! உன்மேல்

கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த

கள்ள அசுரர் தம்மைச்

சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே

விளங்காய் எறிந்தாய் போலும் ;

என்றும் என்பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள்
அங்ஙனம் ஆவர்களே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கேட்டு அறியாதன கேட்கின்றேன், கேசவா !

கோவலர் இந்திரற்குக்

காட்டிய சோறும் கறியும் தயிரும்

கலந்து உடன் உண்டாய் போலும் ;

ஊட்டமுதல் இலேன் உன்தன்னைக்கொண்டு

ஒருபோதும் எனக்கு அரிது;

வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா ! உன்னை

அஞ்சுவன் இன்று தொட்டும்


அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திண் ஆர் வெண்சங்கு உடையாய் ! திருநாள் திரு -

வோணம் இன்று ஏழு நாள் ; முன் ,

பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்

பல்லாண்டு கூறுவித்தேன் ;

கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தது,

அரிசியும் ஆக்கி வைத்தேன் ;

கண்ணா ! நீ நாளைதொட்டுக் கன்றின் பின் போகேல்.

கோலம் செய்து இங்கே இரு

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன்

புத்திரன் கோவிந்தனைக்

கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து அவள்

கற்பித்த மாற்றம் எல்லாம்

செற்றம் இலாதவர் வாழ்தரு தென்புது -

வை விட்டு சித்தன் சொல்

கற்று இவை பாட வல்லார் கடல்வண்ணன்

கழலிணை காண்பர்களே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்

தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி

குழல்களும் கீதமும் ஆகி எங்கும்

கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு,

மழைகொலோ வருகின்றது என்று சொல்லி

மங்கைமார் சாலக வாசல் பற்றி

நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்

உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு,

வசை அறத் திருவரை விரித்து உடுத்து,

பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி,

பணைக்கச்சு உந்தி, பல தழை நடுவே

முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்

அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே

எல்லியம் போதாகப் பிள்ளை வரும்;

எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com