அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மருட்டார் மென்குழல் கொண்டு பொழில் புக்கு

வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி

சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்து உன்னைச்

சுற்றும் தொழ நின்ற சோதி !

பொருள் தாயம் இலேன், எம்பெருமான் ! உன்னைப்

பெற்ற குற்றம் அல்லால்; மற்று இங்கு

அரட்டா! உன்னை அறிந்து கொண்டேன், உனக்கு

அஞ்சுவன் அம்மம் தரவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வாளா ஆகிலும் காணகில்லார்; பிறர்

மக்களை மையன்மை செய்து

தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ

சொல்லப் படாதன் செய்தாய்;

கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி;

கெட்டேன் ! வாழ்வில்லை, நந்தன்

காளாய் ! உன்னை அறிந்து கொண்டேன், உனக்கு

அஞ்சுவன் அம்மம் தரவே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தாய்மார் மோர் விற்கப் போவர், தகப்பன்மார்

கற்றா நிரைப் பின்பு போவர்;

நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை

நேர்படவே கொண்டு போதி ;

காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து

கண்டார் கழறத் திரியும்

ஆயா ! உன்னை அறிந்துகொண்டேன், உனக்கு

அஞ்சுவன் அம்மம் தரவே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்

சோலைத் தடம் கொண்டு புக்கு

முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை

மூவேழு சென்றபின் வந்தாய் ;

ஒத்தார்க்கு ஒத்தன் பேசுவர் உன்னை;

உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்;

அத்தா ! உன்னை அறிந்து கொண்டேன், உனக்கு

அஞ்சுவன் அம்மம் தரவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காரார் மேனி நிறத்து எம்பிரானைக்

கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி

ஆரா இன்னமுது உண்ணத் தருவன், நான்

அம்மம் தாரேன் என்ற மாற்றம்

பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்

பட்டர்பிரான் சொன்ன பாடல்

ஏரார் இன்னசை மாலை வல்லார்

இருடிகேசன் அடியாரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை

மஞ்சனம் ஆட்டி மனைகள்தோறும் திரியாமே,

கஞ்சனைக் காய்ந்த கழல்அடி நோவக் கன்றின்பின்

என்செயப் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பற்றுமஞ்சள் பூசிப் பாவைமாரொடு பாடியில்

சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே,

கற்றுத் தூளியுடை வேடர் கானிடைக் கன்றின் பின்

எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நன்மணி மேகலை நங்கைமாரொடு நாள்தொறும்

பொன்மணி மேனி புழுதியாடித் திரியாமே,

கல்மணி நின்று அதிர் கான் - அதிரிடைக் கன்றின்பின்

என் மணிவண்ணனைப் போக்கினேன்; எல்லே பாவமே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்

பண்ணிப் பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே,

கண்ணுக்கு இனியானைக் கான் - அதரிடைக் கன்றின் பின்

எண்ணற்கு அரியானைப் போக்கினேன் ; எல்லே பாவமே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அவ்வவ் இடம் புக்கு அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்

கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே ,

எவ்வும் சிலை உடை வேடர் கானிடைக் கன்றின் பின்

தெய்வத் தலைவனைப் போக்கினேன் ; எல்லே பாவமே !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com