அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கிப் போய்ப்
படிறு பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே ,
கடிறு பல திரி கான் - அதரிடைக் கன்றின் பின்
இடற என்பிள்ளையைப் போக்கினேன் ; எல்லே பாவமே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
வள்ளி நுடங்கு - இடை மாதர் வந்து அலர் தூற்றிடத்
துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
கள்ளி உணங்கு வெங் கான் - அதரிடைக் கன்றின் பின்
புள்ளின் தலைவனைப் போக்கினேன்; எல்லே பாவமே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்,
என் இளங் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான்
பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின் பின்
என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன்; எல்லே பாவமே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்கள் உடைக்
கடிய வெங் கானிடைக் கால்-அடி நோவக் கன்றின் பின்
கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன் ; எல்லே பாவமே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
என்றும் எனக்கு இனியானை என் மணிவண்ணனைக்
கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர்கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
சீலைக் குதம்பை ஒருகாது, ஒருகாது
செந்நிற மேல் தோன்றிப்பூ;
கோலைப் பணைக் கச்சும் கூறை உடையும்
குளிர் முத்தின் கோடாலமும்;
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன்
வேடத்த்தை வந்து காணீர்;
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார், நங்கைமீர்
நானே மற்று ஆரும் இல்லை.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கன்னி நன் மா மதிள் சூழ்தரு பூம்பொழில்
காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா ! கேசவா !
பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே
ஊட்டி ஒருப்படுத்தேன்;என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை ;
என்குட்டனே ! முத்தம் தா.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
காடுகள் ஊடு போய் கன்றுகள் மேய்த்து
மறியோடி கார்க்கோடற்பூச்
சூடி வருகின்ற தாமோதரா! கற்றுத்
தூளி காண் உன் உடம்பு ;
பேடை மயிற் சாயற் பின்னை மணாளா !
நீராட்டு அமைத்து வைத்தேன்;
ஆடி அமுதுசெய், அப்பனும் உண்டிலன்,
உன்னோடு உடனே உண்பான்.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கடி ஆர் பொழில் அணி வேங்கடவா ! கரும்
போரேறே ! நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக்
கொள்ளாதே போனாய், மாலே !
கடிய வெங் கானிடைக் கன்றின்பின் போன
சிறுக்குட்டச் செங் கமல
அடியும் வெதும்பி உன்கண்கள் சிவந்தாய்,
அசைந்திட்டாய் ; நீ எம்பிரான் !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
பற்றார் நடுங்க முன் பாஞ்சன்னியத்தை
வாய் வைத்த போரேறே ! என்
சிற்றாயர் சிங்கமே ! சீதை மணாளா !
சிறுக்குட்டச் செங்கண் மாலே !
சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை
கட்டிலில் மேல் வைத்துப் போய்,
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்
கலந்து உடன் வந்தாய் போலும்.
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com