அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கிப் போய்ப்

படிறு பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே ,

கடிறு பல திரி கான் - அதரிடைக் கன்றின் பின்

இடற என்பிள்ளையைப் போக்கினேன் ; எல்லே பாவமே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வள்ளி நுடங்கு - இடை மாதர் வந்து அலர் தூற்றிடத்

துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே

கள்ளி உணங்கு வெங் கான் - அதரிடைக் கன்றின் பின்

புள்ளின் தலைவனைப் போக்கினேன்; எல்லே பாவமே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்,

என் இளங் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான்

பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின் பின்

என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன்; எல்லே பாவமே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்

உடையும் கடியன ஊன்று வெம் பரற்கள் உடைக்

கடிய வெங் கானிடைக் கால்-அடி நோவக் கன்றின் பின்

கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன் ; எல்லே பாவமே !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com