அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்

திருத்திய கோறம்பும் திருக்குழலும்

அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்

வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச,

அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை

அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்

பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்

பவளவாய் முறுவலும் காண்போம், தோழீ!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்

தன் திருமேனி நின்று ஒளி திகழ,

நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால்

அணிந்து, பல் ஆயர் குழாம் நடுவே

கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்

குழல் ஊதி இசை பாடிக் குனித்து ஆயரோடு

ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை

அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சிந்துரப்பொடி கொண்டு சென்னி அப்பித்

திரு நாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்

அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை

அழகிய நேத்திரத்தால் அணிந்து

இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை

எதிர் நின்று அங்கு இனவளை இழவேல் என்ன,

சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்

துகிலோடு சரிவளை கழல்கின்றதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வலங் காதின் மேல்தோன்றிப் பூ அணிந்து

மல்லிகை வனமாலை மௌவல் மாலை

சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்

தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி

அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை

அழகு கண்டு என்மகள் ஆசைப்பட்டு

விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர்

வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com