அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை இக - ழேல் கண்டாய்,
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள்;
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்;
நிறைமதீ ! நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய், உன்னைக் கூவுகின்றான்;
ஆழிகொண்டு உன்னை எறியும், ஐயுறவு இல்லை காண்,
வாழ உறுதியேல், மா மதீ! மகிழ்ந்து ஒடி வா.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
மைத்தடங் கண்ணி யசோதை தன்மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஓளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் ;
மாணிக் குறளனே ! தாலேலோ ! வையம் அளந்தானே! தாலேலோ
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
உடையார் கனமணியோடு ஓண் மாதுளம்பூ
இடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடு
விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்;
உடையாய் ! அழேல் அழேல் தாலேலோ ! உலகம் அளந்தானே ! தாலேலோ !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
என்தம்பிரானார் எழிற்திருமார்வர்க்கு
சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு,
இந்திரன்தானும் எழில் உடைக் கிண்கிணி
தந்து உவனாய் நின்றான். தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் ,
செங்கண் கருமுகிலே ! தாலேலோ ! தேவகி சிங்கமே ! தாலேலோ !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழு இல் கொடையான் வயிச்சிரவணன்
தொழுது உவனாய் நின்றான் ; தாலேலோ ! தூமணி வண்ணனே தாலேலோ !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும்
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
மா தக்க என்று வருணன் விடுதந்தான்,
சோதிச் சுடர் முடியாய் ; தாலேலோ ! சுந்தரத் தோளனே ! தாலேலோ!
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
நச்சுமுலை உண்டாய் தாலேலோ ! நாராயணா ! அழேல் , தாலேலோ !
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com