அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வாயிற் பல்லும் எழுந்தில ;
மயிரும் முடி கூடிற்றில;
சாய்வு இலாத குறுந்தலைச் சில
பிள்ளைகளோடு இணங்கி
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள்
தன் அன்ன செம்மை சொல்லி
மாயன் மணிவண்ணன்மேல் இவள்
மால் உறுகின்றாளே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும்

முற்றத்து இழைக்கலுறில்

சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும்

அல்லது இழைக்கலுறாள்;

கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில ;
கோவிந்தனோடு இவளைச்
சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும்
தட்டுளுப்பு ஆகின்றதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என்

பெண்மகளை எள்கி,

தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த

சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்?

ஆழியான் என்னும் ஆழ மோழயில்

பாய்ச்சி அகப்படுத்தி

மூழை உப்பு அறியாது என்னும்

மூதுரையும் இலளே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நாடும் ஊரும் அறியவே போய்

நல்ல துழாய் அலங்கல்

சூடி நாரணன் போம் இடம் எல்லாம்

சோதித்து உழிதருகின்றாள்;

கேடு வேண்டுகின்றார் பலர் உளர்,

கேசவனோடு இவளைப்

பாடுகாவல் இடுமின் என்று என்று

பார் தடுமாறினதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது


பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள்

பாடகமும் சிலம்பும்

இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு

என்னோடு இருக்கலுறாள்;

பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள்

பூவைப் பூவண்ணா ! என்னும் ;

வட்ட வார் குழல் மங்கைமீர் ! இவள்

மால் உறுகின்றாளே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பேசவும் தரியாத பெண்மையின்

பேதையேன் பேதை இவள்

கூசமின்றி நின்றார்கள் தம் எதிர்

கோல் கழிந்தான் மூழையாய்,

கேசவா ! என்றும் கேடிலீ ! என்றும்

கிஞ்சுக வாய் மொழியாள்

வாச வார்குழல் மங்கைமீர் ! இவள்

மால் உறுகின்றாளே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காறை பூணும் , கண்ணாடி காணும் , தன்

கையில் வளை குலுக்கும் ;

கூறை உடுக்கும், அயர்க்கும், தன்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும் ;
தேறி தேறி நின்று ஆயிரம் பேர்த்
தேவன் திறம் பிதற்றும் ;
மாறில் மா மணிவண்ணன்மேல் இவள்
மால் உறுகின்றாளே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கைத்தலத்து உள்ள மாடு அழியக்

கண்ணாலங்கள் செய்து இவளை

வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம் ?

நம்மை வடுப்படுத்தும்

செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன்

செய்வன செய்துகொள்ள

மைத் தடமுகில் வண்ணன் பக்கல்

வளர விடுமின்களே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து

பேணி நம் இல்லத்துள்ளே

இருத்துவான் எண்ணி நாம் இருக்க,

இவளும் ஒன்று எண்ணுகின்றாள் ;

மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்
வார்த்தை படுவதன்முன்,
ஒருப்படுத்து இடுமின் இவளை
உலகளந்தான் இடைக்கே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது


ஞாலம் முற்றும் ஆலிலைத் துயில்

நாராயணனுக்கு இவள்

மாலதாகி மகிழ்ந்தனள் என்று

தாய் உரை செய்ததனை

கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்க்கோன்

விட்டுசித்தன் சொன்ன

மாலை பத்தும் வல்லவர்கட்கு

இல்லை வரு துயரே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com