அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நல்லது ஓர் தாமரைப் பொய்கை

நாண்மலர் மேல் பனி சோர,

அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு,

அழகழிந்தாள் ஒத்ததாலோ!

இல்லம் வெறியோடிற்றாலோ !

என்மகளை எங்கும் காணேன்;

மல்லரை அட்டவன் பின் போய்

மதுரைப் புறம் புக்காள் கொல்லோ ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது


ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத

உருவறைக் கோபாலர் தங்கள்

கன்று கால் மாறுமா போலே,

கன்னி இருந்தாளைக் கொண்டு

நன்றும் கிறி செய்து போனான்;

நாராயனன் செய்த தீமை

என்றும் எமர்கள் குடிக்கு ஓர்

ஏச்சுக்கொல் ஆயிடுங் கொல்லோ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குமரி மணம் செய்து கொண்டு ,

கோலம் செய்து இல்லத்து இருத்தி,

தமரும் பிறரும் அறியத்

தாமோதரற்கு என்று சாற்றி ,

அமரர் பதியுடைத் தேவி

அரசாணியை வழிபட்டு,

துமிலம் எழப் பறை கொட்டித்

தோரணம் நாட்டிடுங் கொல்லோ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஒரு மகள் தன்னை உடையேன்,

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன்;

செங்கண் மால் தான் கொண்டு போனான்

பெரு மகளாய்க் குடி வாழ்ந்து

பெரும்பிள்ளை பெற்ற அசோதை

மருமகளைக் கண்டு உகந்து

மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ ?

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com