அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மைத் தகு மா மலர்க்குழலாய் !

வைதேவீ ! விண்ணப்பம் ;

ஒத்த புகழ் வானரக்கோன்

உடன் இருந்து நினைத் தேட

அத்தகு சீர் அயோத்தியர்கோன்

அடையாளம் இவைமொழிந்தான்

இத் தகையால் அடையாளம்;

ஈது அவன் கைம் மோதிரமே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திக்கு நிறை புகழாளன்

தீ வேள்விச் சென்ற நாள்

மிக்க பெரும் சபை நடுவே

வில் இறுத்தான் மோதிரம் கண்டு

ஒக்குமால் அடையாளம்,

அனுமான் ! என்று உச்சிமேல்

வைத்துக்கொண்டு உகந்தனளால்

மலர்க்குழலாள் சீதையுமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வார் ஆரும் முலை மடவாள்

வைதேவி தனைக் கண்டு

சீர் ஆரும் திறல் அனுமன்

தெரிந்து உரைத்த அடையாளம்

பார் ஆரும் புகழ்ப் புதுவைப்

பட்டர்பிரான் பாடல் வல்லார்

ஏர் ஆரும் வைகுந்தத்து

இமையவரோடு இருப்பாரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கதிர் ஆயிரம் இரவி கலந்து

எறித்தால் ஒத்த நீள்முடியன்

எதிர் இல் பெருமை இராமனை

இருக்கும் இடம் நாடுதிரேல்,

அதிரும் கழற்பொருதோள்

இரணியன் ஆகம் பிளந்து அரியாய்

உதிரம் அளைந்த கையோடு இருந்தானை

உள்ளவா கண்டார் உளர்.

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 959
பெரிய திருமொழி : 2

கலங்க மாக் கடல் அரிகுலம் பணி செய்ய

அரு வரை அணைகட்டி

இலங்கை மா நகர் பொடி செய்த அடிகள் தாம்

இருந்த நல் இமயத்துள்

விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன
வேழங்கள் துயர் கூர,

பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரி தரு

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.2)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 960
பெரிய திருமொழி : 2

துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று

இளங்கொடி திறத்து, ஆயர்

இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்

இருந்த நல் இமயத்துள்

கடி கொள் வேங்கையின் நறுமலர் அமளியின்

மணி அறைமிசை வேழம்

பிடியினோடு வண்டு இசை சொல, துயில் கொளும்

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.3)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 961
பெரிய திருமொழி : 2

மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர

ஒருவனது அகல் மார்வம்

திறந்து வானவர் மணிமுடி பணி தர

இருந்த நல் இமயத்துள்

இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்

கிடந்து அருகு எரி வீசும்

பிறங்கு மா மணி அருவியோடு izhitharu

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.4)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச்

சார்ங்கம் திருச்சக்கரம்

ஏந்து பெருமை இராமனை

இருக்கும் இடம் நாடுதிரேல்,

காந்தள் முகிழ் விரற் சீதைக்கு

ஆகிக் கடுஞ்சிலை சென்று இறுக்க

வேந்தர்தலைவன் சனகராசன்தன்

வேள்வியிற்கண்டார் உளர்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கொலையானைக் கொம்பு பறித்து கூடலர்

சேனை பொருது அழியச்

சிலையால் மராமரம் எய்த தேவனைச்

சிக்கென நாடுதிரேல்

தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று

தடவரை கொண்டு அடைப்ப

அலை ஆர்க்கடற்கரை வீற்றிருந்தானை

அங்குத்தைக் கண்டார் உளர்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தோயம் பரந்த நடுவு சூழலிற்

தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாடுறில்

வம்மின், சுவடு உரைக்கேன்;

ஆயர் மடமகள் பின்னைக்கு ஆகி

அடல் விடை ஏழினையும்

வீயப் பொருது வியர்த்து நின்றானை

மெய்ம்மையே கண்டார் உளர்.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com