எங்கள் மன்னன் மாதவன்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருப்பேர் நகர்

பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
முன்னை யமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுதாட்கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய் !
மாதவன் தன் குழல் வாராய் அக்காக்காய் !

(பெரியாழ்வார் திருமொழி 2-5-1)

[பொருள்]

காக்கையே ! என்னையும், எங்கள் குடி முழுவதையும் அன்பினால் ஆட்கொண்ட மன்னன், மாதவன், தன் குழலை வாரி முடிப்பாயாக ! இந்த மாதவனே நப்பின்னை பிராட்டியின் நாயகன். அமரர் தலைவன். திருப்பேர் நகரில் பள்ளி கொண்டிருப்பவனும் ஆவான்.

(சொற்பொருள்)

பின்னை - நப்பின்னை பிராட்டி
குழல் - கூந்தல்
பேர் - திருப்பேர்நகர் என்னும் திவ்ய தேசம்

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com