ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தன் !

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேரன்பில்* -- நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கும் ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தனா வான்.

(நான்முகன் திருவந்தாதி - 36)

நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள்;
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில்; நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான்.

(நான்முகன் திருவந்தாதி - 36)

naagaththu aNai kudandhai vegkaa thiru evvul
naagaththu aNai arangam pEr anbil; naagaththu
aNai paaRkadal kidakkum aadhi nedumaal
aNaippaar karuththan aavaan.

(naanmugan thiruvandhaadhi - 36)

The Lord reclines on a serpent in Kudandhai, Vehka and Tiruvallur. The Lord reclines on a serpent in Arangam, Thirupper and Anbil. The reclines on a serpent in the Ocean of Milk. But the timeless, originless Lord easily enters the hearts of His devotees.

[பொருள்]

திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிக் கொண்டுள்ள பரம்பொருளான ""ஆதி நெடுமால்", இப்பூவுலகில் தன் அடியார்களுக்கு எளிதில் அகப்படும்படியாகத் திருக்குடந்தையிலும் (கும்பகோணம்), திரு வெஃகாவிலும், திரு எவ்வுள்(திருவள்ளூர்) திவ்ய தேசத்திலும், திருவரங்கத்திலும், திருப்பேர் நகரிலும், திரு அன்பில் திவ்ய தேசத்திலும், நாகத்தணையில் பள்ளிக் கொண்ட வண்ணம் காட்சியளிக்கிறான். இந்த திவ்யதேசங்கள் அனைத்திலும் யோக நித்திரை செய்த வண்ணம், தம் அடியார்களுக்கு மிக எளியவனாக, அவர்கள் கருத்தை அறிந்து அருளைப் பொழிகிறான்.

(சொற்பொருள்)

அணை - படுக்கை; மெத்தை

நாகத்தணை - ஆதிசேஷன் என்னும் படுக்கை

அணைப்பார் - திருமாலுடன் நினைவால் ஒன்றும் அடியவர்; திருவடிகளை அணைப்பவர்; சரணாகதி அடைந்தோர்

கருத்தன் - அடியார்கள் கருத்தை அறிந்து அவர்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொடுப்பவன்.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com