கண்டு கொண்டு என்னைக் காரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண்திசையும் அறிய இயம்புகேன்
ஒண்தமிழ்ச் சடகோபன் அருளையே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 7)

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 8)

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்

நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்

தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆட்

புக்க காதல் அடிமைப் பயன் அன்றே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 9)

பயன் அன்றாகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 10)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com