அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3189
முதல் திருவந்தாதி

ஒன்றும் மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ? ஏழைகாள் -- அன்று
கரு அரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திரு அரங்கம் மேயான் திசை.
(முதல் திருவந்தாதி - 6)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3190
முதல் திருவந்தாதி

திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து
இசையும் கருமம் எல்லாம் -- அசைவு இல் சீர்
கண்ணன், நெடுமால், கடல் கடைந்த கார் ஓத
வண்ணன் படைத்த மயக்கு.
(முதல் திருவந்தாதி - 7)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3191
முதல் திருவந்தாதி

மயங்க, வலம்புரி வாய் வைத்து, வானத்து
இயங்கும் எறி கதிரோன் தன்னை, முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது என் நீ, திருமாலே !
போர் ஆழிக் கையால் பொருது?
(முதல் திருவந்தாதி - 8)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3192
முதல் திருவந்தாதி

பொருகோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒருகோட்டின் மேல் கிடந்தது அன்றே -- விரி தோட்ட
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க
மா வடிவின் நீ அளந்த மண் !
(முதல் திருவந்தாதி - 9)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com