அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வைத்த நெய்யும் காய்ந்த பாலும்

வடி தயிரும் நறு வெண்ணெயும்

இத்தனையும் பெற்றறியேன்

எம்பிரான் நீ பிறந்த பின்னை;

எத்தனையும் செய்யப் பெற்றாய்;

ஏதும் செய்யேன், கதம் படாதே;

முத்து அனைய முறுவல் செய்து

மூக்கு உறிஞ்சி முலை உணாயே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தந்தம் மக்கள் அழுது சென்றால்

தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்;

வந்து நின்மேல் பூசல் செய்ய

வாழ வல்ல வாசுதேவா !

உந்தையார் உன்திறத்தர் அல்லர்

உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்;

நந்தகோபன் அணி சிறுவா !

நான் சுரந்த முலை உணாயே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட

கள்ளச் சகடு கலக்கு அழிய,

பஞ்சி அன்ன மெல்லடியால்

பாய்ந்த போது நொந்திடும் என்று

அஞ்சினேன் காண் ; அமரர் கோவே !

ஆயர் கூட்டத்து அளவன்றாலோ!

கஞ்சனை உன் வஞ்சனையால்

வலைப்படுத்தாய் ! முலை உணாயே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தீய புந்திக் கஞ்சன் உன்மேல்

சினம் உடையன் சோர்வு பார்த்து

மாயந்தன்னால் வலைப்படுக்கில் ,

வாழகில்லேன் , வாசுதேவா !
தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்
சாற்றிச் சொன்னேன் , போக வேண்டா ;
ஆயர் பாடிக்கு அணிவிளக்கே !
அமர்ந்து வந்து என் முலை உணாயே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தீய புந்திக் கஞ்சன் உன்மேல்

சினம் உடையன் சோர்வு பார்த்து

மாயந்தன்னால் வலைப்படுக்கில் ,

வாழகில்லேன் , வாசுதேவா !
தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்
சாற்றிச் சொன்னேன் , போக வேண்டா ;
ஆயர் பாடிக்கு அணிவிளக்கே !
அமர்ந்து வந்து என் முலை உணாயே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மின் அனைய நுண் இடையார்

விரி குழல்மேல் நுழைந்த வண்டு

இன் இசைக்கும் வில்லிபுத்தூர்

இனிது அமர்ந்தாய் ! உன்னைக் கண்டார்

என்ன நோன்பு நோற்றாள் கொலோ

இவனைப் பெற்ற வயிறு உடையாள்

என்னும் வார்த்தை எய்துவித்த

இருடிகேசா ! முலை உணாயே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்

பெறுதும் என்னும் ஆசையாலே

கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் ;

கண்ணிணையால் கலக்க நோக்கி

வண்டு உலாம் பூங்குழலினார் உன்

வாயமுதம் உண்ண வேண்டிக்

கொண்டு போவான் வந்து நின்றார்;

கோவிந்தா ! நீ முலை உணாயே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மின் அனைய நுண் இடையார்

விரி குழல்மேல் நுழைந்த வண்டு

இன் இசைக்கும் வில்லிபுத்தூர்

இனிது அமர்ந்தாய் ! உன்னைக் கண்டார்

என்ன நோன்பு நோற்றாள் கொலோ

இவனைப் பெற்ற வயிறு உடையாள்

என்னும் வார்த்தை எய்துவித்த

இருடிகேசா ! முலை உணாயே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

இரு மலை போல் எதிர்த்த மல்லர்

இருவர் அங்கம் எரிசெய்தாய் ! உன்

திரு மலிந்து திகழு மார்வு

தேக்க வந்து என் அல்குல் ஏறி

ஒரு முலையை வாய்மடுத்து

ஒரு முலையை நெருடிக் கொண்டு

இரு முலையும் முறை முறையாய்

ஏங்கி ஏங்கி இருந்து உணாயே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அங் கமலப் போதகத்தில்

அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்

செங் கமல முகம் வியர்ப்ப,

தீமைசெய்து இம் முற்றத்தூடே

அங்கம் எல்லாம் புழுதியாக

அளையை வேண்டா ; அம்ம ! விம்ம

அங்கு அமரர்க்கு அமுது அளித்த

அமரர் கோவே ! முலை உணாயே .

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com