பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே !
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவிக் கமலக் முதல் கிழங்கே ! உம்பர் அந்த அதுவே.

(திருவாய்மொழி - 10.10.3)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

உம்பர் அம் தண் பாழே ! ஓ ! அதனுள் மிசை நீயே ! ஓ !
அம்பரம், நல் சோதி; அதனுள் பிரமன்; அரன் நீ;
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ;
எம்பரம் சாதிக்கலுற்று என்னைப் போர விட்டிட்டாயே.

(திருவாய்மொழி - 10.10.4)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ ! எனது என்பது என்? யான் என்பது என்?
தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே !

(திருவாய்மொழி - 10.10.5)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய்; இனி உண்டொழியாய்
புனக் காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனிவாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு அன்பா ! என் அன்பேயோ !

(திருவாய்மொழி - 10.10.6)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com