அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நம்பி பிம்பி என்று நாட்டு

மானிடப் பேர் இட்டால்

நம்பும் பிம்பும் எல்லாம் நாலு

நாளில் அழுங்கிப் போம்;

செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர்

இட்டு அழைத்தக்கால்,

நம்பிகாள் ! நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஊத்தைக் குழியில் அமுதம்

பாய்வது போல் உங்கள்

மூத்திரப் பிள்ளையை என் முகில்

வண்ணன் பேர் இட்டு

கோத்துக் குழைத்துக் குணாலம்

ஆடித் திரிமினோ !

நாத் தகு நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சீர் அணி மால் திருநாமமே

இடத் தேற்றிய

வீர் அணி தொல்புகழ் விட்டுசித்தன்

விரித்த சொல்

ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு

ஒன்றும் வல்லவர்

பேர் அணி வைகுந்தத்து என்றும்

பேணி இருப்பரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்

தடிந்த எம் தாசரதி போய்

எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட

எம் புருடோத்தமன் இருக்கை;

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே

கடு வினை களைந்திட கிற்கும்

கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற

கண்டம் என்னும் கடிநகரே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com