பாசுர எண்: 2150
திருவாய்மொழி : 7

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்*
மாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை*
தூய அமுதைப் பருகிப் பருகி* என்
மாயப் பிறவி மயர்வறுத் தேனே.
(திருவாய்மொழி - 1.7.3)

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்*
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை*
தூய அமுதைப் பருகிப் பருகி* என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே.
(திருவாய்மொழி - 1.7.3)​

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்கண்ணங்குடி

பாசுர எண்: 1748
பெரிய திருமொழி : 1

வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய
வாளர வின்அணை மேவி*
சங்கமார் அங்கைத் தடமலர் உந்திச்
சாமமா மேனியென் தலைவன்*
அங்கமா றைந்து வேள்விநால் வேதம்
அருங்கலை பயின்று* எரிமூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர்
திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
(பெரிய திருமொழி - 9.1.1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திரு ஆதனூர்

பாசுர எண்: 0
பெரிய திருமடல் : 10

என்னை மனங்கவர்ந்த ஈசனை - வானவர் தம் முன்னவனை மூழிக்களத்து விளக்கினை அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை நென்னலை யின்றினை நாளையை, நீர்மலைமேல்

வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி* இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை* தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரஞ் சாடி* கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com