அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

காய மலர்நிறவா ! கருமுகில் போல் உருவா ! கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர ! என்சிறுவா ! துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே ! ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி, அழித்து ஆடிய தாளிணையாய் ! ஆய ! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே ! ஆடுக, ஆடுகவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

துப்பு உடை ஆயர்கள்தம் சொல் வழுவாது ஒருகால் தூய கருங்குழல் நல் தோகைமயில் அனைய நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே ! தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனிஒரு தேர் கடவித் தாயொடு கூட்டியஎன் அப்ப! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே ! ஆடுக, ஆடுகவே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம்இல் மருவி உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும் கன்னியரும் மகிழ, கண்டவர் கண்குளிர, கற்றவர் தெற்றிவர, பெற்ற எனக்கு அருளி மன்னு குறுங்குடியாய் ! வெள்ளறையாய் ! மதிள்சூழ் சோலைமலைக்கு அரசே ! கண்ணபுரத்து அமுதே ! என் அவலம் களைவாய் ! ஆடுக செங்கீரை. ஏழ் உலகும் உடையாய் ! ஆடுக, ஆடுகவே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர, கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளிமுளை போல் சிலபல் இலக, நீலநிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ ஏலும் மறைப்பொருளே! ஆடுக செங்கீரை, ஏழ் உலகும் உடையாய் ! ஆடுக, ஆடுகவே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா !
ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்
பைய உயோகு - துயில் கொண்ட பரம்பரனே !
பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே!
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி;
செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக,
ஐய ! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை,

ஆயர்கள் போரேறே ! ஆடுக, ஆடுகவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்

பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்;

என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ !
நின்முகம் கண்ணுள ஆகில் , நீ இங்கே நோக்கிப் போ

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

என் சிறுக்குட்டன் எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான்

தன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான் ;

அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் ,

மஞ்சில் மறையாதே , மா மதீ ! மகிழ்ந்து ஓடி வா .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

சுற்றம் ஓளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்

எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய் ;

வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற

கைத்தலம் நோவாமே, அம்புலீ ! கடிது ஓடி வா .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து

ஒக்கலைமேல் இருத்து உன்னையே சுட்டிக் காட்டும், காண்;

தக்கது அறிதியேல், சந்திரா ! சலம் செய்யாதே ;

மக்கட் பெறாத மலடன் அல்லையேல், வா, கண்டாய் .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா

மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் ;

குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல் ,

புழையில ஆகாதே நின்செவி, புகர் மா மதீ !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com