அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 7
திருப்பல்லாண்டு
: 1
தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்* கோயிற்
பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி யாட்செய்கின்றோம்* மாயப்
பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி பாயச்
சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
(திருப்பல்லாண்டு - 7)
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின்*
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
(திருப்பல்லாண்டு - 7)
theeyir poligindra senchudaraazhi thigazh thiruch chakkaraththin*
kooyiR poRiyaale otRundu ninRu kudi kudi aatcheyginrOm
maaya porupadai vaaNanai aayiram thOlum pozhi kurudhi
paaya suzhatriya aazhi vallaanukku pallaandu koorudhume.
(thiruppallaandu - 7)
To the Lord who wielded His discus on the wicked Banasura who was waging an unfair battle through his illusory powers, we sing Pallandu.
அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருநைமிசாரண்யம்
பாசுர எண்: 998
பெரிய திருமொழி
: 6
வாள் நிலா முறுவல், சிறு நுதல், பெருந்தோள் மாதரார் வன முலைப் பயனே பேணினேன்; அதனைப் பிழை எனக் கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன்; எண்ணினேன்; எண்ணி இளையவர் கலவியின் திறத்தை நாணினேன், வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரண்யத்துள் எந்தாய் !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 8
திருப்பல்லாண்டு
: 1
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிடை நல்லதோர் சாந்தமும் தந்தென்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 9
திருப்பல்லாண்டு
: 1
உடுத்துக் கலைந்தநின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 10
திருப்பல்லாண்டு
: 1
எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோம்என் றெழுத்துப்பட்ட
அந்நா ளேஅடி யோங்கள் அடிக்குடில் வீடுபெற் றுய்ந்ததுகாண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுட் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலைப் பாய்ந்தவ னே!உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
My Lord! The day we became your bonded serfs, the very day our
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 11
திருப்பல்லாண்டு
: 1
அல்வழக் கொன்றும்இல் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாராயணாவென்று நாமம் பலபரவி
பல்வகை யாலும் பவித்திர னே!உன்னைப் பல்லாண்டு கூறுவனே
My lord Tirumal! Like the faultless chief of Kottiyur Selvanambi, a mountain of respectability, I am an old faithful servant of yours. Chanting Namo Narayana and other names in myriad ways with all my power, O Pure One, I sing Pallandu to you.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 12
திருப்பல்லாண்டு
: 1
பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத் தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாரய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
கோகுலம் (திருவாய்ப்பாடி)
,  திருக்கோட்டியூர்
பாசுர எண்: 13
பெரியாழ்வார் திருமொழி
: 1
வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்தள றாயிற்றே.
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
vaNNa maadangal soozh ThirukkottiyUr
kaNNan kEsavan nambi piRandhinil
eNNai chuNNam edhir edhir thoovida
kaNNan mutram kalandhu alaR aayitrE.
(Periyazhvar Thirumozhi - 1.1.1)
When the lord Sri Krishna Kesava was born in Tirukkottiyur of beautiful
mansions they spilled oil and turmeric powder on one another, slushing the portico of Krishna's house.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
திருக்கோட்டியூர்
பாசுர எண்: 14
பெரியாழ்வார் திருமொழி
: 1
ஓடு வார்,விழு வார் உகந் தாலிப்பார்
நாடு வார்,நம்பி ரான்எங்குத் தான்என்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடு வார்களும் ஆயிற்றாய்ப் பாடியே
ஓடுவார், விழுவார் உகந்து ஆலிப்பார்
ooduvaar ,vizhuvaar, ugandhu aalippaar
naaduvaar, nampiraan enguthaan enbaar;
paaduvaargalum palpaRai kotta ninru
aaduvaargalum aayitru aayppaadiye.
(Periyazhvaar Thirumozhi - 1.1.2)
They ran and fell, then rose and greeted joyously, asking, "Where
is our Lord?". Singers, dancers and drummers everywhere thronged
the cowherds' hamlet.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
திருக்கோட்டியூர்
பாசுர எண்: 15
பெரியாழ்வார் திருமொழி
: 1
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகு வார்,புக்குப் போதுவார்
ஆணொப் பார்இவன் நேரில்லை காண்திரு
ஓணத் தான்உல காளும்என் பார்களே
பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில்
pEni seerudai piLLai piRandhinil
kaaNa thaam puguvaar pukku pOdhuvaar
aaN oppaar ivan nEr illai
kaaN thiruvOnathaan ulagu aaLum enbaargaLe.
(Periyazhvaar Thirumozhi - 1.1.4)
Soon after the protected child was born, they poured in to the
nursery to see him, and came out saying, "He has no match!", "He
shall rule the Earth!", "Tiruvonam is his star!"
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com