அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கொழுப்பு உடைய செழுங்குருதி

கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்

பிழக்கு உடைய அசுரர்களைப்

பிணம் படுத்த பெருமான் ஊர் ;

தழுப்பு அரிய சந்தனங்கள்

தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு

தெழிப்பு உடைய காவிரி வந்து

அடிதொழும் சீர் அரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வல்எயிற்றுக் கேழலுமாய்

வாள்எயிற்றுச் சீயமுமாய்

எல்லை இல்லாத் தரணியையும்

அவுணனையும் இடந்தான் ஊர் ;

எல்லியம் போது இருஞ்சிறை வண்டு

எம்பெருமான் குணம் பாடி

மல்லிகை வெண்சங்கு ஊதும்

மதிள் அரங்கம் என்பதுவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குன்று ஆடு கொழு முகில் போல்

குவளைகள் போல் குரைகடல் போல்

நின்று ஆடு கணமயில் போல்

நிறம் உடைய நெடுமால் ஊர் ;

குன்று ஊடு பொழில் நுழைந்து

கொடி இடையார் முலை அணவி

மன்று ஊடு தென்றல் உலாம்

மதிள் அரங்கம் என்பதுவே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பரு வரங்கள் அவைபற்றிப்

படை ஆலித்து எழுந்தானைச்

செரு அரங்கப் பொருது அழித்த

திருவாளன் திருப்பதிமேல்

திருவரங்கத் தமிழ்மாலை

விட்டுசித்தன் விரித்தன கொண்டு

இருவர் அங்கம் எரித்தானை

ஏத்த வல்லார் அடியாமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மரவடியைத் தம்பிக்கு வான்பணையம்

வைத்துப்போய் வானோர் வாழச்

செரு உடைய திசைக்கருமம் திருத்திவந்து

உலகாண்ட திருமால் கோயில் ;

திருவடிதன் திருஉருவும் திருமங்கை

மலர்க்கண்ணும் காட்டி நின்ற

உரு உடைய மலர்நீலம் காற்று ஆட்ட ஓ !

சலிக்கும் ஒளி அரங்கமே.


அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள்

ஆகிலும் சிதகு உரைக்குமேல்

என் அடியார் அதுசெய்யார் செய்தாரேல்

நன்று செய்தார் என்பர் போலும்;

மன் உடைய விபீடணற்கா மதிள் இலங்கைத்

திசை நோக்கி மலர்க்கண் வைத்த

என்னுடைய திருவரங்கற்கு அன்றியும்

மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கருள் உடைய பொழில் மருதும் கதக் களிரும்

பிலம்பனையும் கடிய மாவும்

உருள் உடைய சகடரையும் மல்லரையும்

உடைய விட்டு ஓசை கேட்டான்

இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு

ஏற்றி வைத்து ஏணி வாங்கி

அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான்

அமரும்ஊர் அணி அரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பதினாறாம் ஆயிரவர் தேவிமார்

பணிசெய்யத் துவரை என்னும்

அதில் நாயகராகி வீற்றிருந்த

மணவாளர் மன்னு கோயில் ;

புது நாள்மலர்க் கமலர் எம்பெருமான்

பொன் வயிற்றிற் பூவே போல்வான்

பொதுநாயகம் பாவித்து இறுமாந்து

பொன் சாய்க்கும் புனல் அரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய்

அவனியாய் அரு வரைகளாய்

நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த்

தக்கணையாய்த் தானும் ஆனான்

சேமம் உடை நாரதனார் சென்று சென்று

துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்;

பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன்

புகழ் குழறும் புனல் அரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மைத்துனன்மார் காதலியை மயிர்

முடிப்பிடித்து அவர்களையே மன்னர் ஆக்கி

உத்தரைதன் சிறுவனையும் உய்யக்கொண்ட

உயிராளன் உறையும் கோயில் ;

பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்

முனிவர்களும் பரந்த நாடும்

சித்தர்களும் தொழுது இறைஞ்சத்

திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com